பக்கம்:கங்கா.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா

5


வாசமாயிருப்பார்கள். என் மாமிக்கு அவர்கள் இங்கே வந்து அடிக்கும் கூத்து பிடிப்பதில்லை. அவளுக்கு வைத்த சாமான் வைத்த இடத்தில் இருக்கவேண்டும். ஒன்றும் உடையக்கூடாது. சிந்தக்கூடாது, ஆகையால், இவர்கள் அமளி அவளுக்கு ஒப்புமா ? "சரி சரி கங்கா வந்துவிட் டாளா பட்டாளத்தைக் கூட்டிண்டு?’ என்று காரமாகவே அவள் காது படும்படி அலுத்துக் கொள்வாள். ஆனால் கங்காவா இதுக்கெல்லாம் மசிவாள் ? கிழக்கத்திச் சீமையிலிருந்து மாமாவாத்துக்கு ஒரு பையன் வந்திருக்கானே, அவன் பேச்சு பாவனை எல்லாம் கவனித்து அவனைக் கேலி பண்ணவேண்டாமா? பேச்சுக்குப் பேச்சு வார்த்தைக்கு வார்த்தை ஏதேனும் கோளாறு கண்டுபிடித்துக் கையைக் கொட்டிச் சிரித்த வண்ணமிருப்பாள். சில சமயங்களில் ஒரே வார்த்தையின் ப்ரயோக வேறுபாட்டை நான் அறியாது உபயோகித்து, அர்த்த விபரீதம் ஏற்படுகையில் அவள் கொம்மாளத்திற்கு கங்கு கரையே கிடையாது. எனக்கோ என் பயனற்ற கோபத்தில், சங்கடத்தில், முகம் சிவக்கும். நான் வேதனைப் படப்பட அவள் இரக்கமற்றுச் சீண்டிக் கொண்டேயிருப்பாள். சுபாவமாகவே, அவளுக்குப் பொய்லஜ்ஜை, வெட்கம் இவையெல்லாம் கிடையாது. நான் சங்கோஜி என்று அவள் கண்டு கொண்டதும் என்னை வலுவில் பேச்சுக்கு இழுத்துக் கழுத்தையறுப்பதில் அலாதி ஆனந்தம் கண் டாள். அவளைக் கண்டாலே நான் ஒடி ஒளிய ஆரம்பித் தேன். ஒரு நாள், சுவாமி படங்களைத் தட்டி மாட்டவேண்டு மென்று மாமிக்குத் தோன்றிவிட்டது. மாமிக்கே சாமான் களை ஒழித்துப் பெருக்குவதிலும் புதுப்புது முறையில் அடுக்கி வைப்பதிலும் ஒரு ஆசை. படங்களைக் கழற்று வதும் மாட்டுவதுமாய் மருமானையும் கங்காவையும் அதிகாரம் பண்ணிக் கொண்டிருந்தாள். ஆனால் இம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/19&oldid=1283259" இலிருந்து மீள்விக்கப்பட்டது