பக்கம்:கங்கா.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

கங்கா


ஓரகத்தி வந்த சந்தோஷத்தில், கண்டு கொடுத்த பணத் தையும், காணாமற் போன நகையையும் மறந்து விட்டாள். பாச்சா நமஸ்காரம் பண்ணினாள். ஆனால் செல்லா பண்ணவில்லை என்பதைக்கூட அவள் கவனிக்க :ിഔങ്ങ് . அப்பொழுதுதான் முதன்முதலாய் சந்தித்துக்கொண்ட இருவருக்கும் மூச்சு விடாமல் நாள் கணக்காய்ப் பேச என்ன இருக்குமோ ? வந்தவள் தன் பெட்டியைத் திறந்து புடவைகளையும், நகைகளையும் கடைபரத்திக் காண்பிப் பதும் மூத்தவள் அதைத் தொட்டுத் தொட்டுப் பார்ப்பதும், பேசுவதும் சிரிப்பதுமாய் நேரம் போதவில்லை. நாலு நாட்களுக்கு சம்பிரமமாய்ச் சாப்பாடு, சிற்றுண்டி, செலவைச் சமப்படுத்த இத்தனைக்கும் பின்னால் சுட்ட அப்பளமும் வெற்று ரஸமும் பின்னால் அல்லவா இருக் கிறது ஐந்தாம் நாள் முன்பின் சொல்லவேயில்லை. திடீ ரென் ஒரு டாக்ஸி "டீ"க்காய் வாசலில் வந்து நின்றது. கபோயிட்டு வரோம் அண்ணா மன்னி !!” தெரு முனையில் திரும்பிய பிறகுகூட, அது தன் ஒன்னால் விட்டுச் சென்ற புழுதித் தோகையைப் பார்த் துக்கொண்டு பாருவும் நானும் மெளனமாய் நின்றோம். முரளி குறுநடை நடந்து வந்து அம்மாவின் காலைக் கட்டிக் கொண்டான். "குட்டிப்பா, குட்டி சித்தி எங்கேம்மா? எனக்குப் பப்பூட்டு வாங்கித் தரேன்னாளே " பாரு குழந்தையை எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டாள். "பப்பூட்டு வாங்கிண்டு வரத்தாண்டா ரெண்டு பேரும் போயிருக்கா? அவள் விழிகள் நிறைவதைக் கண்டேன். முகத்தைத் திருப்பிக் கொண்டு விடுவிடென உள்ளே சென்றாள். பாருவின் முகம்கூட என் மனக் கண்ணில் நான் காணும் பசுவின் முகத்தில் திடீரெனப் பொருந்துகிறது. ஒருவேளை உலகத்தின் துயரத்திற்கெல்லாம் ஒரே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/190&oldid=1283369" இலிருந்து மீள்விக்கப்பட்டது