பக்கம்:கங்கா.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

கங்கா


கண் படுமோசமாப் போச்சு. இப்போதெல்லாம் கண்ணுக்கும் சேர்த்து, காதுக்கு டபிள் டியூட்டி, அதுவும் போன வருடம் கண்ணுக்குச் சிகிச்சை செய்யப் போய், ஏதோ பிசகி, உள்ளதும் போச்சு நொள்ளைக் கண்ணா, கையைப் பிடித்துக் கொண்டுபோய் விடவேண்டாம். வாய்க்கும் கைக்கும் வழி தெரியும். ஆனால் அனேகமாய் அத்தோடு சரி. விமலியின் குரல் கணிர்'; "செளக்யமா அப்பா ? நமஸ்காரம் பண்றேன், திக்கு சரிதானே ? இந்த அமலி, உனக்கும் ஒண்ணு. சபை வஞ்சனையில்லாமல்." சுற்றிக் குழந்தைகள் ஆர்க்கின்றன. ஒன்று கழுத்தைக் கட்டுகிறது. ஒன்று மடியில் புரள்கிறது. இன்னொன்று முதுகில் ஏற முயல்கிறது. இரண்டு இடம் கிடைக்காமல் "தாத்தா தாத்தா' என்று கும்.மியடித்தபடிச் சுற்றிச் சுற்றி வருகின்றன. கூடம் அதிர்கின்றது. "என்ன அமலி, கல்யாணம் வந்திருக்கா ?” "என்னவோ அம்மா, எல்லாம் உன் புண்ணியம் !" அக்காவும் தங்கையும் ஏன் இப்படி 'மேக்அப்'யில் சிலம்பம் ஆடுகிறார்கள் ? "விமலி, மாப்பிள்ளை வரவில்லையா? அப்புறம் வருவாரா? "வரமாட்டார், உடம்பு சரியில்லே.” "என்ன உடம்பு ?" "அவர் விஷயம் உனக்குத் தெரியாதா அப்பா ? விமலி இனிமேல் உங்களை’ என்றால் உடம்பைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/194&oldid=1283372" இலிருந்து மீள்விக்கப்பட்டது