பக்கம்:கங்கா.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

藝}確「。 さF。リエ。 18t பிய்த்து பிடுங்கும்) என்றையப்படி நித்ய கல்யானந் தான் !" . விமலியின் கணவன் படுத்த படுக்கையில்லை. ஆனால் சதா உடம்பைப் படுத்திற்று. அத்துடன் விமலிக்காக மனம் இரங்குகிறது. இருந்தும் என்ன செய்ய முடியும் ? அவரவர் வழி அவரவர் தலைவிதி. இதை யார் யாருக்கு விளக்க முடியும்? பெண்ணைப் பெற்றவர்கள் எந்தக் கட்சியும் கொள்ள முடியாது. அமலியின் அதிர்ஷ்டம் விமலியின் வாழ்க்கைக்கு நேர் எதிர்க்காட்டு. ஆண்டவன் புண்ணியத்தில் அமலியின் கணவன் திடமாயிருந்தான். எல்லா விஷயத்திலுமே. அத்தோடு "கெட்டி’யும் கூட. எங்கோ தூர இடத்தில் பிழைப்பைப் பிடித்துப் போட்டிருந்தாலும், நல்ல சம்பளம் : கை நிறையக் கிம்பளம். "வேண்டாம்னா விட்டாத்தானே அப்பா ? தள்ளி உதறினாலும் தானே வரதை என்ன பண்ணலாம் ? புதைக்கிறதா, எரிக்கிறதா, நீங்களே சொல்லுங்கள் !" (அட அமலி, நீ ரொம்பக் கற்றுக் கொண்டுவிட் டாய் ! உன் பேச்சின் பூச்சே ! உன் வாயில் வெண்ணெய் உருகாதோ ?) அமலிக்கு நறுக்காய் ஒரே பிள்ளை. அவனுக்குப் பூணுரல். அதற்குத்தான் கூட்டம் கூடியாகிறது. அமலி வீட்டாரின் பல செளகரியங்களை முன்னிட்டு இங்கே நடக்கிறது ; நடக்கணும். விமலியின் கல்யாணத்திற்குப் பிறகு இப்போத்தான் இந்த வீட்டில் மேளம் கொட்டப் போகிறது. அமலிக்கு எல்லாம் இருக்கிறது. அதையும் மீறிஆசை யிருக்கிறது. தன் பிள்ளையை அபிமான புத்ரனாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/195&oldid=764376" இலிருந்து மீள்விக்கப்பட்டது