பக்கம்:கங்கா.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா

183


விவேகி. வந்த இடத்தில், அதுவும் கலியாணத்தில் சிண்டைப் பிடித்துக்கொள்ள வேண்டாம். . "இதோ பாரப்பா இதை, என்ன வலிக்கிறதாம் இவளுக்கு ?" அவள் விழிகள் தளும்புசின்றன. "இது நாளானால் வெள்ளியில்லையா, நசுங்கினால் வெள்ளி வில்லையா ? ஏதோ, ஏழைக்குத் தக்க எள்ளுருண்டை. இவளுக்குச் சரியா நான் மேருவாக முடியுமா ?-சரியாத் தான் பிடியேன். விரல் ஏன் இப்படி உதர்றது ? உனக்கு அதுக்குள்ளேயும் அவ்வளவு வயசாயிடுத்தா என்ன ?” உடல் கொஞ்சம் பரபரப்பாய்த்தான் இருக்கிறது. இத்தனை வருடங்களுக்குப் பின் எந்த சேதியை வெளிப்படுத்த இக்கிண்ணங்கள் வேளைபோல், கூடியிருக் கின்றன ? சேதியெதுவோ, இன்னும் ஒன்று பாக்கி. மூன்றும் கூடினால்தான் வேளையும் முழுமை, வேளை யின் சேதியும் முழுமையாகுமோ ? அமலி கொடுமைதான் பேசுகிறாள். ஆனால் உண்மையும்தான் பேசுகிறாள். அவளுக்குக் கொடுத்த கிண்ணத்தின் வேளை, அவளுக்கு அமுதகலசமாய்ப் பொங்கி வழிவானேன், விமலியின் கிண்ணம் பிரம்ம கபாலமாய்க் குறையாவே விளங்குவானேன்? அதிருஷ் டம் என்பது ஆளைப் பொறுத்ததா? வேளையைப் பொறுத்ததா ? கமலி வருகிறாள். அவள் வருகையின் முன்னொளி செவிவழி நினை வில் பதிவாகிறது. வருடக் கணக்கான பழக்கத்தடியில் அதன் அச்சு புதைந்து போனாலும் பதிவு தெரியாமல் இல்லை. எனக்குக் கண் குறைந்து போனதிலிருந்து அவள் உள்ளொளியை இன்னும் நிச்சயமாய் உணருகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/197&oldid=1283374" இலிருந்து மீள்விக்கப்பட்டது