பக்கம்:கங்கா.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

கங்கா


வந்தவர்களுக்கு வரவேற்பாய்க் கமலி புன்னகை காட்டுகிறாள். அவள் பார்வை, கிண்ணங்களின் மேல் விழுந்ததும், மாலை வேளையின் வான வர்ணங்கள் போல் அவள் புன்னகையின் ஒளி மிளிர்வு மாறுகின்றது. கிண்ணங்களை எடுத்துக் கொண்டு உள்ளே செல்கிறாள், அவள் சென்ற பின் கூடம் மங்குகிறதோ ? குழந்தைகள் எப்பவோ வாசலுக்கு விளையாடப் போய் விட்டன. திண்ணையை அவை எங்கு கண்டிருக்கின்றன ? கூடத் தில் தேங்கிய மோனத்தைக் கலைக்க விமலி ஆரம்பித் தாள. "அப்பா, எனக்கு ஒண்ணு தோணறது. நாளடைவில் ஒரு நாள், நாங்கள் இங்கே மறுபடியும் வரும்போது, நீ அடுப்பங்கரையிலோ, மாடியறையிலோ ஒரு பாறாங் கல்லைக் காட்டி "இது கமலியாய் இருந்தது” என்று சொன்னால் நாங்கள் ஆச்சரியப்படமாட்டோம், ஏன் என்று கூடக் கேட்கமாட்டோம்." நாங்கள் கிராமத்திற்கு வந்த பின் இங்கே எங்க ளுக்குப் பேச்சு இன்னும் அவசியமில்லை. ஆற்றங் கரையும் தென்னந்தோப்பும், களத்துமேடும், அரசமரத் தடியில் பாம்புப் புற்றும் எங்களை வானத்தின் மோனத் துடன் இழைத்துவிடுகின்றன. உண்மையில் விமலி, அமலி, நீங்கள் வருகையில் சந்தோஷமாய்த் தானிருக் கிறது. ஆனாலும் வந்தபின் உங்கள் ஓயாத பேச்சும் இரைச்சலும் எப்போது போகப் போகிறீர்கள் என்றுதான் இருக்கிறது. இதை உங்களிடம் எப்படிச் சொல்லி மீள்வது ? ★ 责 ★ வாசற்குறட்டில், கயிற்றுக் கட்டிலில் படுத்திருக் கிறேன். ஓசை எப்பவோ அடங்கிவிட்டது. கவிழ்ந்த கிண்ணம் போன்ற வான் தட்டில் நட்சத்திரங்கள் கதிர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/198&oldid=1283375" இலிருந்து மீள்விக்கப்பட்டது