பக்கம்:கங்கா.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒ கங்கள் மாதிரிக் காரியங்களில் எனக்கு மனம் செல்வதில்லை. இருந்தாலும் மாமியிடம் உள்ளுற பயம். அவள் கண்டிப் பான பேர்வழி. ஆகையால் செய்யும் காரியத்தில் மனமில் லாது கையையும் காலையும் ஆட்டிக் கொண்டிருந்தேன். "டேய் அதை யெடேன்." முக்காலி மேல் ஏறி நின்று கொண்டு மாமி கீழே கையை நீட்டி எதையோ காட்டி னாள் , "எதை?" - “அதான் கங்கையை என்றதை "கங்காவை" என்று மனதில் வாங்கிக்கொண்டு விட்டேன். கங்காவையா ?” என்று குழறினேன். உடனேயே என் தவறு எனக்குத் தெரிந்துவிட்டது. ஆனால் அதற்குள் என்னுள் ஏதோ நேர்ந்துவிட்டது. கத்தியுடன் கத்தி சந்தித்துப் பொறி பிறந்தது போல் என்னுள் ஏதோ நேர்ந்துவிட்டது. "கங்கா- ஜாலரோடு ஜாலர் மோதினாற் போல் அவள் நாமம் ஜல் என்று புது நாதத்துடன் செவியின் ஜீவாவை உதைத்துக் கொண்டு கிளம்பிற்று. கட்டிய வெள்ளி மணிகளின் கிணிகினியுடன் என்னுள் ஒரு சிற்பக் கதவு மெதுவாய் ஆடி அசைந்துகொண்டு திறந்தது. கால் கட்டை விரல்வரை உடல் ஜிவ் விட்டது. என்னுள் நேர்ந்ததை என் கண்களில் அவள் கண்டு கொண்டாள். கன்னங்களில் சிவப்பு படர்ந்தது. கண்களின் மேலிமைகள் மெதுவாய்த் தாழ்ந்தன. அவள் பார்வை குனிந்தது. முதன் முதலாய் கங்கா என்முன் வெட்கிப் போனாள். கங்கா என் தேவி ! "மண்டு : அந்த ஸ்தாலியை எடுன்னேனே 1 மாமி யிடம் அதை எடுத்துக் கொடுத்துவிட்டு, கங்கா சிட்டாய்ப் பறந்தாள். ஏதோ சட்டை போல் என் பையல் பருவம் என்னின்று அன்று கழன்றது. ஒன்றுமே புரியாத ஒரு புதுப் பருவத்தில் புகுந்து கொண்டிருந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/20&oldid=764381" இலிருந்து மீள்விக்கப்பட்டது