பக்கம்:கங்கா.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

கங்கா


"இப்போதெல்லாம் எனக்கு இப்படிக் கூடத்தோன்று. கிறது." அவள் கண்கள் சஞ்சலித்தன. கோரினதே கிடைத்து விட்டது என்றாலும் கிடைத்த பின் அப்படிச் சுலபமாய்க் கிடைத்து விடலாமோ? அப்படியும் எனக்குத் திருப்தியில்லை. இன்னொரு விதமும் தோன்றுகிறது. அப்படித் தோன்றுவதைச் சரியாய் வெளிப்படுத்தத்தான் எனக்குத் தெரியவில்லையா, இல்லை அப்படித் தோன்று வதே சரியில்லையா ? எப்படியென்று நீங்கள்தான் சொல்லவேண்டும் இப்போதெல்லாம் உங்களைக் கண்டாலே அழுகையாய் ஆத்திரமாய் வருகிறது. நீங்கள் ஏன் நீங்களாய் இருக்கிறீர்கள் ? உங்களுக் கென்று தனி உருவாய் அதற்கென்று அதனுடைய தனித் தன்மை உடைய பழக்க வழக்கங்களுடன் நீங்கள் வளைய வருவதே, உங்களுக்கென்று நீங்கள் இருப்பதே என்னுடைய பிரிவினைதான்; என்னைத் துண்டம் போட்ட துடிப்புத் தான்; என்ன சொல்கிறீர்கள் ?” அவள் முகம் விட்டு விட்டுச் சிவக்கின்றது. திடீர் திடீரென வெளிப்படும் இந்த உக்ரம் காண்கையில் நெஞ்சில் ஒரு தினுசான பீதிதான் காண்கிறது. ஏதேதோ வினாத் தெரியாத புழுக்கள் போன்று சந்தேகங்கள் ஒன்றோடொன்று புழுங்குகின்றன. 责 ஒரு நாள் ஆபீசிலிருந்து திரும்ப நேரமாகிவிட்டது. அம்மா ராமர் கோவிலுக்குப் போய்விட்டாள். கதை கேட்க. கமலி. தட்டும் மணையும் போட்டுக் காத்துக் கொண் டிருந்தாள். "உங்களுக்குப் பரிமாற இன்றுதான் எனக்குக் சான்ஸ் கிடைத்தது.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/204&oldid=1283378" இலிருந்து மீள்விக்கப்பட்டது