பக்கம்:கங்கா.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

a)解·母。剪叶· 19? அவள் வெற்றியுணர்வு அவள் தோற்றத்திற்கே ஒரு முறுக்கேற்றியிருந்தது. காற்றில் மிதக்கும் விளக்கின் வெளிச்சத்தில் அழுந்தச் சீவிய கூந்தல் பளபளத்தது. வளையல்கள் கைகளில் குலுங்கிச் சுடர்மூச்சு விட்டன: அவளிடம், அவளே குங்கிலிய ஜ்வாலைபோல் ஒரு வெறி மிளிர்ந்தது அவளிஷ்டப்படியே ஸ்வீகரித்துக் கொண்டு. என் சோபையையும் வலுவையும் அவள் ஒளியில் இழந்: தேன். போல் தோன்றிற்று. இன்னதென்று புரியாமல், அவள் மேல் அல்ல, அந்த வேளையின் மேல் அது என்னைச் சதிசெய்து விட்டாற்போல் என்னில் ஊமை யானதோர் கோபம் மூள்வது உணர்ந்தேன். “என் கிண்ணங்கள் எங்கே ?” "கிண்ணங்கள் எதற்கு ? அதான் நான் இருக் கிறேனே !" என்றாள். "குழம்புக்கொரு கிண்ணம்." ரஸ்த்துக்கொரு கிண்ணம்: மோருக்கொரு கிண்ணம். அர்த்தமில்லாமல் முனகி னேன். "ஏன், நான் பரிமாற மாட்டேனா ?” எனக்குச் சட்டெனப் பதில் எழவில்லை. அரை மனதில் தயங்கி நின்றேன். விட்டிற் பூச்சி ஒன்று என் முகத்தில் மோதி, தட்டில் வீழ்ந்து நெளிந்தது. சுவாமி விள்க்கில் சுடர் பொரிந்தது. அவள், விரலோடு விரல் முறித்தபடி நின்றாள். எங்கள் இருவரிடையிலும் மோனம் விரிந்து அதன் கரைகள் அகன்றன, எ தி ர் க் கரைகளில் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு நின்றோம்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/205&oldid=764387" இலிருந்து மீள்விக்கப்பட்டது