பக்கம்:கங்கா.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

象}店”。°。群”序”。 #93 "அவள் போயிட்டாடா !” கால்கள் வெலவெலத்தன; சுவரைப் பிடித்துக்கொண் டேன்: "உங்கள் ரெண்டு பேருக்கும் என்னடா சச்சரவு ? ராத்திரியே ரெண்டு பேரும் சாப்பிடல்லியா ? வடித்த சாதம் அப்படியே ஜலம் கொட்டிக்கிடக்கே!" எனக்குச் சீ ற் ற ம் மூண்டெழுந்தது. "இதைச் சொல்லவா அம்மா இவ்வளவு அவசரமாய்க் கூப்பிட் டாய் ? அவள் எங்கே ?” "இன்னிக்குக்கூட அவள் சாப்பிடவில்லை. ரெண்டு மூணு தடவை கேட்டுப் பார்த்தேன். சரியான பதில் இல்லை, எனக்குத்தான் ஏகாதசியாப் போச்சு. ரேழியில் அரைக் கண் உறக்கமாயிருந்தேன். எதிரே திடீர்னு, கையில் ஏதோ இரண்டு துணி திணித்த பையோடு வந்து நின்னா.” "அம்மா, நான் போறேன்." "எங்கேடி ?’ தூ க் கி வாரிப்போட்டு எழுந்து உட்கார்ந்தேன். “ஊருக்குப் போறேன். இந்த வீட்டில இனமேல் எனக்கு வேலையில்லை." "என்னடி பேத்தறே ?” "இல்லை. சொன்னால் உங்களுக்குப் புரியாது" என்று சொல்லிக்கொண்டே என்னைத் திமிறிண்டு போயிட்டாள். அப்படி என்னடா உங்களுக்குள்ளே நடந் துடுத்து ? நாம் ஏமாந்து போயிட்டோம்டா. கைக்கடங் காத குதிரையிடம் மாட்டிக்கொண்டோம். அப்படியே நீ கோபித்தாலும், கோபிக்க உனக்கு உரிமையில்லையா ? அவளுக்கு இப்படித்தான் தோனணுமா ?” க-13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/207&oldid=764389" இலிருந்து மீள்விக்கப்பட்டது