பக்கம்:கங்கா.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

கங்கா


இதே மூச்சில் இன்னும் ஏதேதோ அம்மா அரற்றிக் கொண்டிருந்தது காதில் ஏறவில்லை. கைக் கெடியாரத் தைப் பார்த்தேன். ஸ்டேஷனுக்கு ஓடினேன். ஊ ரு க் கு த் த ன் போகிறாளோ? அல்லது, வேறேதாவது பண்ணிக்கொண்டு விடுகிறாளோ ? விளக்கில் பச்சை விழுந்துவிட்டது. ப்ளாட்பாரத்தில் கூட்டம் குழுமிவிட்டது. கூட்டத்தில் ஒட்டாமல் தன் நிழலைக் கண்டு தானே மிரளும் விலங்கு போல் ஓர் உருவம், தன்னோடு தான் ஒண்டிக்கொண்டு சுவரோர மாய்...... விரைந்து சென்று மெளனமாய்க் கையைப் பிடித் தேன். கை தகித்தது. உடல் பதறி முகம் என்பக்கம்திரும்பிற்று. குழிவாங்கிய விழிகளில், எரியும் கனல் தூய்மையில், புடைத்தெழுந்து வடியும் மூச்சில், அவளிடமிருந்து ஒளி வீசிற்று. ரிஷி கோபம் இப்படித்தான் இருக்குமோ ? தன்னையே அழித் துக் கொள்ளுமளவுக்குத் தன்னையே மறந்ததாய்...

  • கமலி, முடுக்கிக் கொள்ளாதே. கிண்ணங்களை மறந்து விடு" என்றேன்.

"எப்படி மறப்பது ? உங்களை இப்போது புரிந்து கொண்டு விட்டேன். உங்களிடம் நான் ஏமாந்து போனேன்.” எனக்குச் சுருக் கென்றது. "என்ன புரிந்துகொண் டாய் ? என்ன ஏமாந்தாய் ?" "அவைகள் கிண்ணங்கள் இல்லை. உங்கள் எண் னங்கள்-” அப்பவே, நெஞ்சைத் துருவும் கிறீச்சில் ஊதிக் கொண்டு ரயில் ஸ்டேஷனுள் புகுந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/208&oldid=1283380" இலிருந்து மீள்விக்கப்பட்டது