பக்கம்:கங்கா.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா

195


மண்டையை, தலையினின்று தனி வில்லையாய் பெயர்த்துவிடும் போன்ற உள் எழுச்சியில் வலி நெற்றிப் பொட்டைத் துருவிற்று. தலையை இரு கைகளாலும் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டேன். எதிரே, ஸ்டேஷன், ஜனங்கள், எல்லா உருவங்களும் எழுதி அழித்துவிட்டாற். போல் மங்கி ஒன்றோடொன்று இழைந்து இருண்டன. "கிண்ணங்கள் இல்லை, உங்கள் எண்ணங்கள்." கிண்ணங்களின் பழக்கம் எப்போது துவங்கிற்று என் பதுகூட மறந்துவிட்டது. எந்நாளாவோ அவைகளை ஆள்கிறேன். பள்ளியிலிருந்து கல்லூரி வரை, பிறகு உத்தியோகத்திற்கும் வெகு நாட்களுக்குப் பின் ஒட்டலில் சாப்பிட்ட பழக்கமாயிருக்கலாம். வாழ்க்கை பாதிக்கு மேல் வீட்டை விட்டுத் தனித்தே யிருந்து, என் காரியத்தை நானே. பார்த்துக்கொண்டு அதனால் ஏற்பட்ட என் தனிமை, என் ஒதுக்கம், என் பதர்!0...... இப்படி என்னை விட்டுக் கொடுக்காமல் என்னுடன் என்னைக் கெட்டியாய் பிடித்துக் கொண்டிருக்கும் அவசி யம் இல்லாவிட்டாலும், சுபாவம் படிந்து போயிற்று, வீட்டோடு ஒட்ட வழி முதலிலேயே நேரவில்லை. "அப்பா மாரடைப்பில் போய்விட்டார்." தந்தியைக் கையில் பிடித்துக் கொண்டு திக்பிரமை யுடன் நின்றது ஞாபகமிருக்கிறது. ஆனால்: மருந்துக் கொரு கண்ணிர், தொண்டையில் ஒரு அடைப்புக்கூட எழவில்லை. . இத்தனைக்கும் என்னை ஆளாக்கியதே அப்பாதான். தான் வீட்டுக்கு ஒரே பிள்ளை, படிக்கும் நாளிலும், வேலைதேடும் நாட்களிலும், நான் கேட்டும் கேட்காமலும் ரோக் ரோக் காய் அனுப்பி வைத்து, தன் கஷ்டம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/209&oldid=1283381" இலிருந்து மீள்விக்கப்பட்டது