பக்கம்:கங்கா.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா

7


அன்று முதல் கங்கா என்னைத் துன்புறுத்துவதை விட்டாள். அல்லது அவள் சீண்டல் முன்போல் என்னை உறுத்தவில்லையோ ? என் புதுப் பார்வை அவளுடைய ஒவ்வொரு செயலிலும் பேச்சிலும் அங்க அசைவிலும் கவிதை கண்டது. அவளிடமிருந்து எனக்குக் கனிவாய் ஒரு வார்த்தை வரின் அதில் கனவின் அழகு மிளிர்ந்து என்னையும் கனவாக்கியது. ஒருநாள் மாலை நான் வெளியில் உலாவச் சென்று கால் போன வழி நடந்து வழிதப்பிப் போய் மீண்டும் வழிகண்டு வீடு திரும்பும் வேளை வெகு நேரமாகிவிட்டது. கங்கா வாசலில் நின்று கொண்டிருந்தாள். என்னைக் கண்டதும் முகத்தின் படலம் விலகியது. "எங்கே போயிருந்தாய் ? அடேயப்பா - இந்தக் கிழக்கத்திக்காராளுக்கே என்ன துணிச்சல் : நாங்கள் எல்லாம் எவ்வளவு கவலைப்பட்டுண்டிருக்கோம் தெரி யுமா ? நான் இப்போ அப்பாவிடம் சொல்லி உன்னைத் தேட ஆள் விடறதாயிருந்தேனாக்கும்”. என்னுள் ஒரு சிட்டுக்குருவி படபடவென்று அடித்துக் கொண்டது. அதன் சுறுசுறுப்புத் தாங்குவதற்குப் பயமா விருந்தது. "நிஜமாவா?” என்றேன், அர்த்தமில்லாமல் "இதில் பொய் என்னவாம் ?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே சென்றாள். அவ்வார்த்தைகளிலேயே ஜன்மத்தின் பரிசை அடைந்து விட்டதாய்த் தோன்றிய என் புதுவிழிப்பு எனக்குப் புரியவில்லையே புரியாமலும் என்னதான் யோசனை பண்ணுகிறேன் ? தெரியாது. உள்ளே போகாமல் நின்றவிடத்திலேயே வெகுநேரம் நின்று கொண்டிருந்தேன். கிங்காவின் தகப்பனாருக்கு என்னை ரொம்பவும் பிடித்து விட்டது. அவருக்கு என்னைவிட நாலு வயது மூத்தவனாய் ஒரு பையன்-கங்காவுடன் பிறந்தவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/21&oldid=1283260" இலிருந்து மீள்விக்கப்பட்டது