பக்கம்:கங்கா.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ps)3 கங்கள் முகத்தில் எவ்விதமான மாறுதலுமில்லை. ரயிலடி யிலிருந்து அழைத்து வந்த அன்றிலிருந்தே அப்படித் தான். கள்ளிச் சொட்டுப் போன்ற பால், அதன் தேக்கம் தரை மேல் சோம்பி அகல்வதைப் பார்த்துக்கொண்டு நிற்கிறேன். அன்றொரு நாள்-ஆனால், என்றுமே தான்சிருஷ்டியின் பொருள்கள் அனைத்தும் ஆண்டவனின் அத்தனை எண்ணங்களாய் அவ்வெண்ணங்களின் ரகஸ் யங்களைத் தம்முள் அடக்கிக்கொண்டு, பார்க்குமிட மெல்லாம் இரைந்து கிடக்கின்றன. ஆனால், அவ்வெண் ணங்களை எண்ணுவதற்கு, அவைகளுள் பொதிந்த அவைகளின் பொருளைச் சிந்திக்கத் தோன்றுவதற்கு, வேளையின் கூடுதல், திருஷ்டியின் அதிருஷ்ட்ம் வேண்டும். அன்றொருநாள், மழை பெய்து ஓய்ந்ததும் மல்லி கைப் புதரடியில் ஒரு நத்தை ஊர்வதை கண்டேன். வெகு மெதுவாய், ஆனால் வெகு காரியமாய், துர்க்க முடியாமல் தன் ஒட்டை முதுகின் மேல் சுமந்து செல் கிறது. இதுபோல், நானும் என் பத்தரத்தை, என் பத்ரமே என் கோட்டையாய், என் கோட்டையே என் பாரமாய், என் மேல் சுமந்து கொண்டு எங்கு செல் கிறேன் ? என்மாதிரியே ஒவ்வொருத்தரும் அவரவர் சுமை டன்...... என்னிடம் எதைத் தேடி ஏமாந்ததற்காகக் கமலி அன்று பாலின் சமிக்ஞையில் உணர்த்தியபடி, தன் வாழ்க்கையைத் தன் மெளனத்தின் பலிபீடத்தின்மேல் ஆஹாதியாய் ஏன் வடித்துக் கொண்டிருக்கிறாள்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/212&oldid=764395" இலிருந்து மீள்விக்கப்பட்டது