பக்கம்:கங்கா.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

கங்கா


எஸ். எஸ். எல். ஸி. பரிகூைடியை மூன்றாம் முறை படை யெடுத்திருந்தான். திடீரென்று கங்காவின் தகப்பனார் இடுப்பில் ஒரு முண்டைக் கட்டிக்கொண்டு கிளம்பிவிடுவார். "வா, வா வெள்ளம் அடிக்கலாம்” என்று என் கையைப் பிடித்துக் கரகரவென்று இழுத்துக்கொண்டு வெந்நீருள்ளுக்குப் போவார். வென்னிருள்ளில் ஒரு பெரிய டாங்க் உண்டு கிணற்று ஜலத்தை அதில் நிரப்ப கைப் பம்ப் அடித்தாக வேண்டும். முதலில் நாலு அடி அடித்துக் காண்பித்து விட்டுப் பிறகு என்னை அடிக்கச் சொல்வார், நான் மொண மொணப்பேன். “சரிதாண்டா சின்னப் பையலா யிருந்துண்டு இதுக்குச் சோம்பறாய் ! அடிக்க அடிக்க தேகத்துக்கு நல்ல பலமாக்கும் !" என்று அவருடைய மலையான உச்சரிப்பில் இழுத்துஇழுத்துப் பேசி அதிகாரம் பண்ணிவிட்டுப் போய்விடுவார். அந்த ராக்ஷஸ் 'டாங்’கில் ஜலம் கட்டுவதற்குள் தோள்விட்டுப் போகும், முன்பின் பழக்கமிருந்தால்தானே நான் ஒசைப்படாமல் நழுவத் தயாராய்க் கொண்டிருக்கையில், கங்கா ஓசைப்படாமல் அடிமேல் அடியெடுத்து வைத்து, சிரித்தவண்ணம் வருவாள. "நான் அடிக்கிறேன்!” "ஒண்ணும் வேண்டாம்.” "உன்னால் முடியாது. முன்பின் பழக்கமில்லை யல்லவா?” "பரவாயில்லை”-என்று ஆத்திரத்துடன் பம்பைக் கறப்பேன், "அப்படியடிச்சால் சீக்கிரமே களைச்சுப் போவாய் கேட்டையா ?” "நீ இங்கே விட்டுப் போ !” எரிந்து விழுவேன். அவள் சிரித்துக்கொண்டே நகருவாள். இனி நான் ஓடிப்போன்ால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/22&oldid=1283261" இலிருந்து மீள்விக்கப்பட்டது