பக்கம்:கங்கா.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Gö。菇。莎“雷”。 #5 கிற்ேறு சில்லென மோதியது. ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்த்தேன். நீண்டதோர் பாலத்தின் மேல் ரயில் வெகு வேகமாய்ப் பேர்ய்க்கொண்டிருந்தது. அடியில் ஜலம் அகண்டமாய் விரிந்தது. எனக்கு ஒரு எண்ணம் தோன் றிற்று. திடீரென்று இங்கு ரயில் கவிழ்ந்துவிட்டால் : அடிக்கடி பத்திரிகைகளில் இப்போது, இதைத்தானே படிக்கிறோம் ! அப்படியே கவிழ்ந்தாலும் அடியில் அதி பாதாளத்தில் மினுமினுக்கும் ஜலத்தில் நான் வீழ்ந்து கொண்டிருக்கையிலேயே கங்கா எனும் நாமம்தான் என் வாயின் கடைசி ஓசையாயிருக்கும் என்று நினைக்கை யிலேயே அந்நினைப்பே மனதிற்கு ஒரு ஆறுதலா யிருந்தது. ரயில் ஏன் இன்னும் கவிழ ஆரம்பிக்கவில்லை ? ஆனால் அது என்னைச் சட்டை செய்யாமல் பத்திர மாய், வேகமாய்ப் போய்க் கொண்டிருந்தது. கிங்காவிற்குத் திடீரென்று கலியாணம் கூடிவிட்டது. இவையெல்லாம் எப்படி நேருகிறதென்று எனக்குத் தெரிய வில்லை. என் அக்காவிற்காக என் அப்பா ஜாதகக் கட்டைத் தூக்கிக்கொண்டு ஊர் ஊராய் வருஷக்கணக்கில் அலைந்தது எனக்கு இன்னும் மறக்கவில்லை. ஆனால் கங்காவிற்கோ திடீரென்று முன்பின் அறிக்கையில்லாமற் கூடி, முகூர்த்தம் கூடக் குறித்தாகிவிட்டது. பையன் பெண்ணைப் பார்க்க வரும்போது எனக்குப் பொறுக்கமுடியும் என்று தோன்றவில்லை. நான் அந்த வேளைக்கு வீட்டைவிட்டுப் போய்விட்டேன். ஆனால் சில நாட்கள் கழித்து நான் அவனைப் பார்க்க நேர்ந்தது. கங்காவின் தகப்பனார் பெருமிதத்தோடு அவனை வீட்டிற்கு மறுபடியும் ஏதோ சாக்கில் அழைத்து. வந்திருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/29&oldid=764405" இலிருந்து மீள்விக்கப்பட்டது