பக்கம்:கங்கா.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

கங்கா


"இவர் தான் புது மாப்பிள்ளை' என்று மாமாவுக்கு அறிமுகப்படுத்தினார். அவனைப் பார்த்ததும் அவனிட மிருக்கும் குறைகள் தாம் எனக்குத் தலைகாட்டி நின்றன. பையன் பி. ஏ. பரிகூைடி மூன்றாம் பாகத்தில் பல்டி", தலையைச் சாய்த்துக்கொண்டு, லேசான காக்கைப் பார்வை. உச்சந்தலையில் இப்பவே சின்ன சொட்டை. அதை மறைக்க ரொம்பவும் பாடுபட்டிருந்தான். கால் கட்டைவிரல் நகம் ஒன்று சொத்தை. இருந்தால் என்ன ? ஒரே பிள்ளை. தகப்பனார் உத்தி யோகம் பண்ணி கிம்பளமாய்க் கொள்ளையடித்தது தவிர பூர்வீக சொத்து வேறே நிறைய. இன்னமும் அத்தை வழியிலும் தாய் வழியிலும் வேறு வர ஏராளமாய் காத்துக் கொண்டிருந்தது. சொந்தமாய் கார் கேட்கணுமா ? ஆனால் இது எல்லாவற்றையும் விட அக்கிரமம் கங்கா திடீரென்று மாறிப் போனதுதான் என்னை அடியோடு மறந்துவிட்டாள். சாப்பாடு வேளை, படுக்கை வேளை போக பாக்கிப் பொழுதெல்லாம் குடியிருக்கிற மாமாவாத்திலே குடியிருப்பவளுக்கு இப்போது ஏன்' என்று கேட்க நேரம் இல்லை. மருதாணியிலையை வரவழைத்து, அதைக் கொய்து அரைத்து இட்டுக் கொள்ளவும், புடவை வாங்கவும் நகை வாங்கவும் பெரியவர்களுடன் கடைகளுக்குப் போகவும், கடையிலிருந்து வந்தபின் வாங்கிவந்த சாமான் களைப் பற்றிச் சண்டை போடவும், விதவிதமாய் அலங் காரம் பண்ணிக்கொண்டு சினேகிதிகள் வீட்டிற்குப் போய் வரத்தான் சரியாயிருந்தது.இவளுடைய அட்டகாசத்துக்கு ஒத்தாசையாக இடையிடையே பிள்ளை வீட்டாரின் கார் வந்து வந்து வாசலில் நிற்கும். அவள் குஷியாய்க் காலத்தைக் கழித்து வந்தாள். ஆனால் நானோ முதுகைத் தடவிக் கொடுத்துக்கொண்டே யிருந்துவிட்டுத் திடீரென்று சமுத்திரத்தில் வீசியெறியப்பட்ட குச்சு நாயின் பயங்கர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/30&oldid=1283266" இலிருந்து மீள்விக்கப்பட்டது