பக்கம்:கங்கா.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

●帮”。岛F。珂首。 1? நிலையை அடைந்து விட்டேன். எப்படி நீந்திக் கரை சேர்வாயோ அது உன்பாடு ஆனால் கங்கா என் சொத்தா? அவளிடம் நான் என்ன எதிர்பார்த்தேன்? எதை அவளிடம் எதிர்பார்க்க எனக்கு என்ன நியாயம் அல்ல உரிமை உண்டு? என்று கேள்விகள் தாமே எழுந்தன. ஆயினும் அவைகளுக்குப் பதிலோ சமாதானமோ தெரியாததால் என் வேதனை அதிகரித்தது. சாப்பாடு வேண்டியில்லை. இருப்புக் கொள்ளவில்லை, ஒருவரும் இல்லாத சமயத்தில் கண்ணில் ஜலம்கூடத் தளும்பிற்று. ‘கடவுளே என்னை எப்படியாயினும் இந்தக் கஷ்டத் திலிருந்து விடுவி'-எனக் குழந்தைபோல் வேண்டுவேன். ஆனால் பக்த பராதீனனாகிய அவனே நேரில் பிரசன்ன மாகி "எந்தக் கஷ்டம்?" என்று கேட்டால் அவனுக்கு விவரித்துச் சொல்ல என்னிடம் என்ன பதில் இருக்கிறது? முகூர்த்தத்திற்கு இன்னும் ஒரு வாரம் இருந்தது. ஒரு மாலை நான் எங்கள் விடுதியில் இருட்டில் உட்கார்ந்தபடி என்னுள் என்னைச் சுற்றி இடிந்த என் உலகைப் பார்த்து யோசனை பண்ணிக்கொண்டிருந்தேன். பொழுது நன்கு சாய்ந்துவிட்டது. கையெழுத்து மறைந்து கொண்டிருந்தது. இடையில் குடத்தைத் தாங்கி, புன்னகை புரிந்தபடி கங்கா என் முன்னே நின்றாள். "கிணற்றடிக்கு வரையா துணைக்கு ?” அவளுக்குப் பதில் சொல்ல எனக்குத் தோன்ற வில்லை. அவள் அழகைக் கண்களால் ஆசையாய்ப் பருகினேன். ஆனால் பருகப்பருக தாபம் அதிகரித்தது. இவள் குரூபி ஆகிவிடக் கூடாதா? என்று ப்யங்கரமாய் ஒரு ஆசை, மனதில் தட்டிற்று. என் எண்ணம் க-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/31&oldid=764408" இலிருந்து மீள்விக்கப்பட்டது