பக்கம்:கங்கா.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

கங்கா


பாயமானாலும் அம்மாதிரி அவளுக்கு நேரும் சாபமே. எனக்கு ஆறுதல் தரும் வரமாயும் கூடும். "என்ன, காது கேக்கலையா ?” "நான் எதுக்கு ?" என்றேன், புழுக்கத்துடன். "இந்த நாட்டிலே கள்ளர் பயம். இந்த மாதிரி வேளை யிலேதான் கொல்லைப்புறத்திலே ஒளிஞ்சுண்டிருப்பான். யாராவது ஜலத்துக்கு வந்தால் கன்னத்திலே அறைஞ்சு கழுத்திலேயிருக்கிறதை அறுத்துண்டு ஒட்டம் பிடிப்பான்." "அந்தக் கள்ளன் என்னை மாத்திரம் அறைய மாட்டானா ?” என்றேன். "நீ ஆம்பளை சிங்கமில்லையா ?” வாய்பேசாது அவளைப் பின் தொடர்ந்தேன். அவள் என்னை ஒரு கருவியாய் உபயோகப்படுத்துகிறாள் என்ற ஆத்திரம் ஒரு பக்கம் பொங்கிற்று. ஆனால் என்னை அவள் நாடும் சந்தர்ப்பத்தை விலக்க மனதில் வலிமை வில்லை . ஏதோ ஒரு மெட்டை முனகிக் கொண்டே, கங்கா கிணற்றிலிருந்து ஜலம் இழுக்க ஆரம்பித்தாள். நான் முன்பு பார்த்ததற்கு இப்போது வளர்ந்திருந்தாள். எனக்கு ஒரு பிரமை. ஒரு மகத்தான சம்பவத்திற்குத்தான் காரணி எனும் எக்களிப்பே உடலிற்கு ஒரு வாளிப்பையும் நடை யுடை பாவனைகளில் ஒரு புது மலர்ச்சியையும் தந்ததோ ? ஜலமிழுக்கையில் பின்னல் பிடரியினின்று சரிந்து கிணற்றுள் தொங்கிற்று. என்னால் பொறுக்க முடியவில்லை. ஒரு பிரம்மாண்ட மான முயற்சியில் என்னில் இருக்கும் தைரியம் அத்தனை யும் வருவித்துக் கொண்டேன்.

  • கங்கா !” அவளுக்குக் காது கேட்கவில்லை. இன்னும் சற்று கெட்டியாய், "கங்கா !” என்று கூப்பிட்டேன்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/32&oldid=1283267" இலிருந்து மீள்விக்கப்பட்டது