பக்கம்:கங்கா.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

கங்கா


பார்க்கத் தைரியமிலாது கவிழ்ந்த தலையுடன் டொங்கா வில் ஏறினேன். இனி இப்பக்கம் எப்பவோ ? இப்போது கூட இவ்வண்டியும் இன்னும் சற்று நேரம் கழித்து ரயில் சக்கரங்களின் ஒவ்வொரு உருளலும் என்னை கங்காவிட மிருந்து எட்ட எட்டக் கொண்டு போகிறது என்பதை எண்ணுகையிலேயே துக்கத்தையும் மீறிய ஒரு திகிலில் வயிறு பகீர், பகீர் .இது என் வாழ்க்கையில் ஒரு இடை வேளை, என்பதை மனம் லேசில் ஒப்ப மறுத்தது. நான் நினைத்ததற்கு சரியாக, திரும்பிய சில மாதங் களுக்கெல்லாம் மாமாவிற்கு மாற்றலாகிவிட்டது. நான் கள்ளிக்கோட்டைக்கு மறுபடியும் போவதற்கு ஒரு சாக்கும் ஒழிந்தது. அப்புறம் குடும்பத்திலும் என்னென்னவோ நேர்ந்தன, எல்லாமே நினைத்தபடியே நேருகிறதா ?. ஆனால் இப்போது அப்படியல்ல. இப்போது ரயில் முன்னேறும் ஒவ்வொரு அடியும் என்னைக் கங்கா விடமோ அல்லது அவளைக் கண்டு பிடிப்பதற்கான தகவல்களை விசாரிக்கும் இடத்திற்கோ கிட்ட எடுத்துச் செல்கிறது. அன்றுபோல் இப்போது நான் கிணற்றடியில் மயங்கி நிற்கமாட்டேன். கங்காவிடம்சொல்ல வேண்டுவது என்னவென்று எனக்கு இப்போது தெரியும். நான் என்ன சொல்ல வந்தேன் என்பதையும் அவள் இப்போது அறிந் திருப்பாள். எனக்கு வாழ்க்கை சலித்துப் போனதுபோல் அவளுக்கும் கசந்து போயிருக்கும். அவளையும் அவள் குணங்களின் நிரடலான அழகுகளையும் ரஸிக்க அவள் கணவன் எப்படி லாயக்காவான் ? எங்களிருவருக்கும் எங்களைத் தவிர இனி கதியில்லை. ஆனால் கங்கா இறந்திருந்தால்-? முதுகுத் தண்டு சில்லிட்டது. ஏற்கெனவே பேச்சு வாக்கில் சொல்லியிருக்கிறாள். அவர்கள் கூட்டமே அல்பாயுசு. ஒரு அக்கா பிரசவத்தில் இறந்துவிட்டாளாம். ஒரு அண்ணன் 'டி.பி. யில் போய்விட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/34&oldid=1283269" இலிருந்து மீள்விக்கப்பட்டது