பக்கம்:கங்கா.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 கங்கள் இருக்கு பார்த்தாயோன்னோ ? அவனை சமாதானப் படுத்தி, அவள் விலாசத்தை விசாரித்தேன். கடைசியாத் தெரிஞ்ச விலாசம் கொயமுத்துாரில் அவள் புருஷன் ‘வெக்கல் பண்ணிண்டிருந்தான் என்று தெருப் பெயரைச் சொன்னான். அன்றிரவே கொயமுத்துருக்குப் பயணமானேன். ஆனால் அங்கு குறித்த விலாசத்தில் அவர்கள் கிடைக்கவில்லை. அக்கம் பக்கம் வி சாரி த் த தில், வருமானம் மந்தம் என்று பக்கத்திலிருந்த கிராமத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்னால்தான் மூட்டை முடிச்சுடன் போய் விட்டார்கள் எனத் தெரிந்தது. கங்கா எட்டப் போகப் போக, என் ஊக்கம் இன்னமும் தீவிரம் அடைந்தது. கங்கா என் சங்கல்பம்; இனி அகப் பட்டு விடுவாள். நான் கிராமத்தை யடைந்தபோது ஊர் ஒசையடங்கி விட்டது. ஒரு வீட்டுத் திண்ணையில் காலை அப்பொழுது தான் நீட்டின ஒரு கிழவரை கங்காவின் கணவன் பேரைச் சொல்லி விசாரித்தேன். அவர் நான் தேடிவந்த வீட்டை உட்கார்ந்த இடத்திலிருந்தே சுட்டிக் காட்டினார். நெஞ்சில் இதயம் கழைக் கொடியாய் ஆட, அந்த வீட்டுப் படி ஏறினேன். வாசற்கதவு திறந்துதான் இருந்தது. எனினும் உள்ளே வெகுதூரம் வரை இருட் டாய்த் தானிருந்தது. அப்பால் எங்கோ ஒரு மினுக் மினுக் இது என் மகத்தான நிமிஷம். விரல் கணுவால் கதவைத் தட்டினேன். "யாரது?” என்றது. ஒரு ஆண் குரல் அதிகாரத்துடன், "பரதேசி' - என்றேன். மார் படபடத்தது. ஏன் அப்படிச் சொன்னேன் ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/36&oldid=764413" இலிருந்து மீள்விக்கப்பட்டது