பக்கம்:கங்கா.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா

23


"கங்கா ! யாரோ பிச்சைக்காரன் வந்திருக்கான் ஒரு பிடி சாதம் போடு." தூக்கக் கலக்கத்தில் ஒரு குரல் முனகிற்று "சரிதான்; உங்களுக்கென்ன ? எழுந்திருக்கச் சொன்னவா என் பாவம் கொண்டவான்னு எனக்கிருக்கு." "என்னடீது பரதேசின்னு ஒரு ஆள் வந்திருக்கான்மூலையிலிருக்கிற பழையதைப் பிழிஞ்சுப் போட இவ்வளவு சோம்பினால்? புதித்ாய் சம்ைசிசாப் போடப் போகி தாய் ?” முக்கி முனகிக்கொண்டு அவள் எழுந்திருக்கும் அரவம் கேட்டது. சற்று நேரத்திற்கெல்லாம் நான் உள்ளே இருட்டில் கண்ட பொறி என்னை நெருங்கத் தொடங் கிற்று. என்னுள் சிற்பக் கதவுகளில் கட்டிய வெள்ளி மணிகள் ஒரேயடியாய் அலறின. இருளிலிருந்து பிரிந்து ஒரு கையில் தட்டும் ஒரு கையில் விளக்குமாய் ஒரு உருவம் உள்வாசல்களைக் கடந்து தெரு வாசலை நோக்கி வந்துகொண்டிருந்தது. ஆட்டுக்கல் நடந்து வருவதுபோல் அதுவே ஒரு வியாதி ஏகமாய் ஊதிப்போன சரீரம். ஜலத்தில் கப்பல் புரளுவது போல் ஒவ்வொரு அடிக்கும் பக்கவாட்டில் சாய்ந்தது. கிட்ட நெருங்க நெருங்க கதுப்பாடும் கன்னங்களுக்குமேல் சீயக்காய் விரையைப் பதித்தாற்போன்று கண்கள் இடுங்கிப் போயிருந்தன. அவளுக்கு நடப்பதே பிரயாசை யாயிருந்ததால் புஸ் புஸ் என்று ரோடு என்ஜின் மாதிரி மூச்சு ஊதிற்று. - என் எதிரில் வந்து நின்றாள். என்னுள் ஏதோ மளமள வெனச் சரிந்தது. "என்னடா ஏனம் கொண்டு வந்திருக்கையா ?” "கங்காவா ?” என்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/37&oldid=1283270" இலிருந்து மீள்விக்கப்பட்டது