பக்கம்:கங்கா.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

கங்கா


"ஆமா..." என்று ஞாபக மறதியாய் சொல்லிவிட்டு உடனே ஆத்திரத்தோடே, "பார்த்தேளா இந்த அக்கிர "என்னடி என்னடி !!- உள்ளே இருந்து அவள் புருஷன் ஓடிவரும் சப்தம் நெருங்கிற்று. "இந்தக் கட்டையிலே போறவனுக்கு பிச்சை வாங்கறதுக்கு முன்னாலே என் பேரைத் தெரிஞ்சுக் கணுமாம்...” ஆனால் நான் அவளுடைய பாக்கிப் பேச்சுக்கு அங்கில்லை. ஓட்டமாய் ஓடினேன். வெகுதூரம் ஓடினேன், இருட்டில் எங்கோ தடுக்கிக் குப்புற விழுந்தேன். விழுந்த இடத்தில் விழுந்தபடி விக்கி விக்கி அழுதேன். அழுது கொண்டேயிருந்தேன். எனக்கு நினைவு வந்தபோது ரயில்வே போர்ட்டர் என்னைத் தோளைப் பிடித்துக் குலுக்கிக் கொண்டிருந் தான். "என்ன சாமி தூங்கிட்டீங்க ? தூக்கத்தில் அளுவ நீங்களே எளுந்திருங்க எளுந்திருங்க, லாஸ்ட் வண்டி வருது ” கண்ணைக் கசக்கி விழித்து என்னைச் சுற்றி நோக் கினேன். வண்டி வந்து நின்றது. அவன் கையில் ஒற்றை ரூபாய் நோட்டு ஒன்றைத் திணித்துவிட்டு வண்டியில் ஏறினேன். - "என்னாத்துக்குங்க இது ?” “என்னை மீட்டுக் கொடுத்ததற்கு" என்று கூவினேன். கதவைத் தட்டினேன். கவலை தோய்ந்த முகத்துடன் என் மனைவி கதவைத் திறந்தாள். என்னைக் கண்டு. விட்டதும் மறுபடியும் முகம் கடுகடுத்தது. திட்டிக் கொண்டே இலையைப் போட்டாள். திட்டிக்கொண்டே பரிமாறினாள். சாப்பிடும் நேரம் பூரா திட்டிக்கொண்டே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/38&oldid=1283271" இலிருந்து மீள்விக்கப்பட்டது