பக்கம்:கங்கா.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

கங்கா


வெயிலில் வேகும் வயல்களே, அந்நிலவில் குளிக்கும் நந்தவனமாகி விடும்; பாசியும் ஊசலும் படர்ந்த இவ் வாய்க்கால், தாமரையும் ரோஜாவும் மலிந்து கந்தர்வர் குளிக்கும் அற்புத ஒடையாகும். அப்பொழுது, அவன் கற்பனையின் எழுச்சியில் அப்பறைச்சி என்ன ஆவாள் ? கற்பக வனத்துப் பொய்கையில் அப்லரஸ் விளையாடு வதைக் கண்டானா ? அல்ல, நள்ளிரவின் வெண்ணிலவில் கண்ணனை எதிர்பார்த்து வேளைக்கு முன்னாே வந்து, யமுனையில் கா த் தி ரு க் கு ம் முதல் ஜலக்ரீடியைக் கண்டானா ? அல்ல க்ரீடை முடிந்து, அவரவர் வீட்டுக்கு விரைந்த பிறகும் ஆனந்த மூர்ச்சையில் இன்னமும் ஜலத்தில் லயித்துக் கிடக்கும் கடைசி கோபிகையா ? அல்ல ; பஞ்சவடியில் சூர்ப்பனகையின் சாயை விழு முன்னர்,பம்பையில் nதாபிராட்டி அனுபவித்த ஆனந்தாம் ருதத்தின் ஒரு நிமிஷப் பிரத்யகூடிமா ? அல்ல ; ஆண்டவன் ஆதி மண்ணில் பிசைந்த முதற் பெண்மையா ? "பசுபதியையே மணாளனாய்க் கொள்வேன்' என்று இமவான் மகள் இயற்றும் கடுந்தவத்தில் குளிக்கச் சென்ற விடத்தில், கடவுளை நினைந்து, தன்னை மறந்து, யோக நித்திரையில் ஆதிபரை ஆழ்ந்த புனிதமா ? அல்ல, திலோத்தமையைத் தழுவ, சுந்தோபசுந்தர் இட்ட சண்டையையொத்து, ஒரு பெண்ணைக் குறித்து, வெப்பமும் அப்புவும் இடும் போட்டியா ? கண்டது என்னவோ ? கண்டதையெல்லாம் எழுத முயன்றான். அவரவர் லயிப்பில் அவரவர். அவனுக்கு அவன் எழுத்தில்; அவளுக்கு அவள் குளிப்பில். இன்னமும் அவள் அவனைப் பார்க்கவில்லை. இருவரும் மற்றோர் ஆள் அவ்விடம் வருவதை பார்க்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/42&oldid=1283273" இலிருந்து மீள்விக்கப்பட்டது