பக்கம்:கங்கா.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா

29


அவனுக்கோ, கவலையேற்றத்தினின்று இறங்கிய களைப்பு. பசி வயிற்றை எலியாய்ப் பிராண்டிற்று. கஞ்சியெடுத்துவான்னு சேரிக்கு அனுப்பின பொம்புள்ளே இன்னமும் வந்து சேரல்லே; என்ன திமிர் பார்த்தியா ? அவன் பொம்புள்ளே சோற்று மூட்டையைக் கரையில் வைத்துவிட்டு, வாய்க்காலில் குளிப்பதைக் கண்டான். அவளைத் திட்டத் திறந்த வாய் மூடாமல் அப்படியே தொங்கிற்று, கரையில் உட்கார்ந்துகொண்டு அவளைப் பார்த்து இளித்துக் கொண்டிருக்கும் வெறியனையும் கண்டுவிட்டான். “அஞ்சு ருவாயும், அரை பீப்பா கள்ளும், ஒரு சேவலும் வரிசையாக் கொடுத்து, தொட்டுத் தாலி கட்டி, குடும்பம் நடத்தலாமின்னு கூட்டி வந்தேன் இவளை : எத்தினி நாளா, இந்த மாதிரி கட்டினவனுக்குச் சொந் தத்தை விலைக்கு வெளிலே காட்டி தொழில் நடத்திட் டிருக்கா ? தேவடியா ...... குடிசைக்குப் போய்க் கூழைக் கொண்டு வாடின்னா இப்படி காலையுமில்லே, மாலையு மில்லே, கால் காசுக்குத் துரோகமா பண்றே- ஆமா, பிறத்தியான் பொம்புள்ளே மானத்தை இப்படிக் கால் காசுக்கு அனுபவிக்கிற இந்தப் பட்டிமவன் யாரு?பார்த்தா, பார்ப்பானாட்டம் இருக்கான் ஆமா நான் பறையன்தான்; ஆனால், என்ன ? அவன் செங்கல் கட்டி வாழ்ந்தா எனக்கு மாத்திரம் ஒரு குடிசையிலே குடி குடும்பமில்லே ? கெளரவமில்லே ? நான் புருசனல்ல ? அவனுக்கு மண்டை திகு தி குவெ ன எரிந்தது காதண்டை "ஜோ வென்று சமுத்திரம் இரைந்தது. சுரேலென்று பின்னால் வந்து, கவியின் எழுத்தாணியைப் பிடுங்கி அவன் மயிறைப் பிடித்துத் தலையை நிமிர்த்தி, விலாவில் ஓங்கிக் குத்தினான். ஒரே குத்துத்தான். எல்லாம் சொற்பத்திலும் சொற்ப நேரம்தான். (சொல்லத் தான் இந்நேரம்) எண்ணத்தின் நேரம்கூட இல்லை. எண்ணம் நேராய் மாறிய செயல் நேரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/43&oldid=1283274" இலிருந்து மீள்விக்கப்பட்டது