பக்கம்:கங்கா.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கங்கன 30 அவன் வந்தான், கண்டான், நினைத்தான், கொன் றான. ஆலிலை, கவியின் கரத்தினின்றும் நழுவியது. அது ஜலத்தில் விழுமுன்னர், அவனது ரத்தத்தில் ஒரு துளி யைத் தாங்கிக்கொண்டது. அவ்வுதிரத் துளி, தண்ணீரில், இலைப் படகில் மிதக்கையில், வெயிலின் ஒளியில் பவழ மாய் மின்னிற்று. வாய்க்காலில் குளித்துக் கொண்டிருக்கும் ஸ்திரி தன்னை நோக்கி மிதந்து வந்த அந்த இலையைக் கையிலெடுத்துப் பார்த்தாள். அவளுக்கு வியப்பாயிருந்தது. ஏதோ நாலு கிறுக்கு : அது நடுவே ஒரு துளிச் சிவப்பு : அது காலனின் கையெழுத்து. அதன்மேல் அவன் வைத்த முத்திரையென்று அவள் எப்படிக் கண்டாள் ? "தேவடியா திருட்டுத் தேவடியா !!- பறத்தேவ டியா !” கரையின் அத்தனை உயரத்திலிருந்து அவன் குதித்ததும் தண்ணீர் பெரும் சுவர்களாய் எழும்பி இடிந்து விழுந்தது. அந்த எழுத்தாணி அவள் மார்பிலே அழுந்துகையில் அவளுக்கு வீறிட நேரமில்லை. ஆணியின் வேகம் அவ் வேகம். அது சென்ற பாதையும், அவ்வளவு சொகுசுகாலன் அவளைத் தழுவலில் அவ்வளவு ஆசை. அவள் கை வீசிய வீச்சில், ஆலிலை, எதிர்க் கரைமேல் விழுந்தது. இச்சமயம் அதன் கனமும் இரட்டை ஆகி விட்டது. ஒரு துளி ஆண் இரத்தம், ஒரு துளி பெண் இரத்தம் ஒன்றையொட்டி யொன்று. அவளைக் கொன்ற பிறகுதான், பறையனுக்கு மூளைக் கொதிப்பு தணிந்தது. உணர்வு வந்ததும் உதறல் கண்டது. விழுந்தடித்துக்கொண்டு ஆணியைக் கீழே எறிந்துவிட்டு ஓடினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/44&oldid=764422" இலிருந்து மீள்விக்கப்பட்டது