பக்கம்:கங்கா.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@經°。部。鄧訂s 3露 அப்புறம் என்னென்னவோ நடந்தது-வாய்க்காலில் குளியாடும் சவத்தைப்பற்றியும், கரையில் கிடந்த சவத் தைப்பற்றியும், சோற்று மூட்டையின்மேல் விழுந்திருந்த எழுத்தாணியைப் பற்றியும் அதெல்லாம்பற்றி நமக்கென்ன ? இது இலையின் கதை. அதுவும் இனிக் கொஞ்சம்தான். வெயிலில் காய்ந்து, காற்றில் அலைந்து, எங்கெங்கோ சென்று, அது கடைசியில், அடுப்புக்குச் செத்தை பெருக்கும் ஒருத்தியின் துடைப்பத்தில் சிக்குண்டது. "எந்தக் கட்டையிலே போவானோ புகையிலை மென்னு துப்பிட்டிருக்கான் - இல்லாட்டி, இலை தைக்கலாம்-இருந்தாலும் பரவாயில்லை; பெரிய இலை, காஞ்ச இலை, நல்லா எரியும் " அவள் நினைத்ததும் சரிதான். நன்றாகத்தான் எரிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/45&oldid=764423" இலிருந்து மீள்விக்கப்பட்டது