பக்கம்:கங்கா.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா

33


சொல்லவோ நான் யார்?" என்றீர்களே ! தாங்கள் இருக் கையில் தங்கள் இரக்கத்தை நான் அறியவில்லை. இப்பொழுது சந்தேகங்கள் எழுகின்றன. நாம் அலைந்த இடங்களில், பகலில், மரத்தடியிலும், இரவில் மடத்திலும் என்னை நிறுத்திவிட்டு, தாங்கள் எடுத்து வந்த பிச்சை பூராவுமே சில சமயங்களில் என்னிடம் கொடுத்துவிட்டு, "எனக்குப் பசிக்கவில்லை" அல்லது "வயிறு சரியில்லை” என்று திருப்பிப் படுத்துக் கொண்ட போதெல்லாம் உண்மையைச் சொன்னீர்களோ ? என் வயிறு பசியாதிருக்க, நீங்கள் பட்டினி கிடந்தீர்கள். எனக்காக வயிறு ஒடுங்கியே, தங்கள் புறப்பாடு அவசரம் பட்டுவிட்டதென்றே நினைக்கிறேன். தங்களையலாது, தங்களைக் குருவாய் நான் வரித்த பாவனையை வணங்குகிறேன். ஆனால் என் வயிற்றின் பொருட்டு பொய் சொன்னிர்கள். என்னால் உயிர் விட்டீர்கள். இப்படி எண்ணும் என் எண்ணத்தின் துணிச்சலை மன்னியுங்கள். எண்ணமே இல்லாது இருக்க என்னால் முடியவில்லை. பாபமோ, துணிச்சலோ எண்ணி யது எண்ணியதுதான். அல்லது; எனக்கு மறதியை அருளுங்கள். ஆனால் தங்கள் ஆத்மா, தங்கள் கடைசி மூச்சில் ஏறிக் கொண்டு, புறப்படுகையில், என் செவியைத் தங்கள் உதட்டசைவின் மேல் குனிந்துக் கேட்ட தங்கள் இறுதிக் கட்டளை: "...ற வாதே." முதலெழுத்தைக் காற்றோ இலைகளின் சலசலப்போ விழுங்கிவிட்டது. அதனால் என்ன ? க-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/47&oldid=1283275" இலிருந்து மீள்விக்கப்பட்டது