பக்கம்:கங்கா.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல் என் சிறுவயதில், என் தகப்பனார், காஞ்சிபுரத்துக் கருகே ஒரு கிராமப் பள்ளிக்கூடத்தின் ஹெட்மாஸ்டர். நாங்கள் குடியிருந்த வீட்டின் சொந்தக்காரர் எதிர் வீட்டிலேயே இருந்தார். நந்திக்கு எண்ணெய்க் காப்பிட் டாற்போல் பெரிய சரீரம், பளபளக்கும் கறுப்பு. சுபாவ மான வழக்கத்துக்கு மாறாக தான் அனுட்டித்த சைவத்தில் செருக்கு. அறப்பளிசுர சதகம், தேவாரம், பட்டினத்தார் பாடல், திருவாசகம், திருவண்ணாமலைப் பதிகம், அருணகிரி அந்தாதி, அருட்பா, குறள், நாலடியார் வாயி லிருந்து அப்படி அப்படியே கொட்டும். எங்கிருந்துதான் அந்த ஞாபகசக்தியோ? பேசாத சமயங்களில் ரேழித் திண்ணையில், சுவரில் சாய்ந்தபடி, சுட்டு விரலால் காற்றில் ஏதோ வரைந்து கொண்டிருப்பார். முதலியார் சுபாவம் நேரிடையாக, வெளிச்சமாகப் பேசமாட்டார். எதையுமே சொல்லில் ஒளித்துப் பேசுவார். "ராமாபுரம் (வேணுமென்றுதான் அப்படி அழைக் கிறாரோ?) நீ பிராம்மணப் பிள்ளையாயிருக்கிறாயே, நீ உயர்ந்த குலமாச்சே! நாம் இங்கே வந்திருக்கிறோமே இந்த உலகத்தில், எதற்காக என்று சொல்வாயா?" எனக்கு அப்போ வயது பத்து, பன்னிரண்டிருக்குமா? ஆனால் என்னைப் பெரிய மனிதனாகப் பாவித்து, இதே கேள்வியைப் பலமுறை, பலவிதங்களில், மாதக்கணக்கில் கேட்டுவிட்டுப் பிறகு தானே ஒருநாள்: "என் கேள்விக்கு என்ன பதில் தெரியுமா? உருவேறத் திருவேறும் இதற் குத்தான் வந்திருக்கிறோம். இதுதான் பதில், இதுதான் பாடம், இதுதான் விஷயம், என்ன நான் சொல்வது புரியுதா? இல்லை;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/5&oldid=764428" இலிருந்து மீள்விக்கப்பட்டது