பக்கம்:கங்கா.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

கங்கா


மாத்திரம் படும் எதையோ வெறித்தது. முகம் வெடித்து விடும்போல் உப்பிற்று. "ஆத்மநாதா, நீ சொன்னது உண்மை, உண்மை. முக்காலும் உண்மை. அது ஒளிந்துகொண்டது. ஆத்ம தாதா நான் ஏமாந்து போனேண்டா குழந்தைபோல் விக்கி விக்கி அழுதீர்கள். தங்கள் துயரம் தங்களை எரிக்கையில், பார்க்க பயமாயிருந்தது. அதன் அனல் என்மேல் வீசுகையில், என்னுடைய நெஞ்சுள் ஏதோ இளகிப் புரண்டு, இடறிற்று. நாம் தேடியது குச்சியா ? யாவதிலும் ஒளிந்து கொண்டிருக்கும் அர்த்தம் இது தானா ? அதைத் தேடுவதும் இதுதானா ? அன்று இரவு இருப்பே கொள்ளவில்லை. புரண்டு. முனகினேன். - மையிருளில் எதிர்த் திண்னையில் உட்கார்ந்திருக்கும் உங்கள் வடிவக் கோடுகள் தெளிவிலாது தெரிந்தன. லேசாக இலை அசைந்தால்கூட உயிர் பிசகும் மோனம், எதிர்த் திண்ணையிலிருந்து, பல மைல்களுக்கப்பா லிருந்து உங்கள் குரல் எட்டிற்று. "ஆத்மா, துங்குகிறாயா ?” "விழித்துக் கொண்டு தானிருக்கிறேன்." "ஆத்மா, நான் இப்படி ஆகுமுன் ஒரு பெரிய ஜேப்படி.." நான் பதில் பேசவில்லை. நான் பேசவே என்ன இருக் கிறது ! -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/50&oldid=1283278" இலிருந்து மீள்விக்கப்பட்டது