பக்கம்:கங்கா.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா

39

. எத்தனையோ தடவை களவாடிவிட்டு, பொருளைத் தோற்றவனுடன் சேர்ந்து, விளம்பரமாய் அவன் பொருளை தேடியிருக்கிறேன். அவன் வாயிலும் வயிற்றி லும் அடித்துக் கொள்கையில் நான் தைரியம்தர அவன் முதுகைத் தட்டியிருக்கிறேன். நான் நடத்தும் நாடகம் எனக்கே வேடிக்கையாக, சிரிப்பாயிருக்கும். ஆனால் இதுவரை எவனையும் அவன் சாவுக்கு அனுப்பியதில்லை. திக்பிரமை பிடித்து நின்றேன். கடைசி நிமிஷத்தில் முழுகி முழுகி எழுகையிலும் கூப்பிய கை பிரியாமல் இருக்கமுடியுமா ? நான் காண்பது கண்கட்டு வித்தையா ? எந்த மானத்தைக் காப்பாற்ற இந்தப் பணத்தை நம்பியிருந்தானோ அந்தப் பணத்தை இழந்ததால், உயிரைத் துறக்கும் அளவுக்கு உயிர் மேல் நம்பிக்கையிழந்தவன், உயிரினும் பெரிதாய் நம்பிக்கை வைத்து, சாவிலும் அவன் வணங்கிய அது எது? அப்போதிலிருந்து இன்னும் என் கேள்விகளுக்குப் பதில் தேடிக் கொண்டிருக்கிறேன். ஆத்மா, உன்னால் சொல்ல முடியுமா ? பதில்கள் இருக்குமோ ? நான் தேடு வது சமாதானங்கள் அல்ல; சமாதானத்தைத் தேடுபவன் சமாதானம் அடையமாட்டான்; எனக்கு வேண்டியது. பதில் பதில் கிடைத்தவனுக்குத்தான் சமாதானம் கிட்டும்.” நான் பதில் பேசவில்லை. நான் பேசவே என்ன இருக்கிறது ? அந்த நட்சத்திரம் இன்னமும் தனியாய்த் தத்தளித் துக் கொண்டிருக்கிறது. அந்த நிமிஷமே எனக்கு அம்மா, மனோவின் நினைவு எழுந்தது. அவ்வெழுச்சி வேகம் வயிறு குமட்டிற்று. எழுந்து உட்கார்ந்து நெற்றியை அமுக்கிப் பிடித்துக் கொண்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/53&oldid=1283281" இலிருந்து மீள்விக்கப்பட்டது