பக்கம்:கங்கா.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鴿 கங்கள் அம்மா என்ன செய்கிறாளோ ? முதலில் இருக் கிறாளோ இல்லையோ? ஏற்கெனவே தள்ளாமை. அவள் போகும் வரையிலாவது நான் காத்திருக்கலாம். மனோஎன்னைக் காணோமே என்று மனமொடிந்து எங்கே யாவது குளம், கிணறைத் தேடிவிட்டாளோ? நான் வீட்டை விட்டுக் கிளம்பியபோது மனோ மூன்று மாத கர்ப்பிணி, - அவள் தனக்கேதேனும் இழைத்துக் கொண்டால் அந்த பாவம் வேறு எங்கு போகும்? என்னைத்தானே சேரும்? . குடும்பத்தை விட்டு வந்த பிறகு மறுபடியும் குடும்பத் தைப் பற்றிய எண்ணங்களுக்கு எனக்கு உரிமையுண்டோ? உண்டோயில்லையோ, எண்ணியது எண்ணியது தான். எண்ணமே இல்லாது இருக்க முடியவில்லையே உண்மையில் நாம் எதைத் தேடிக் கொண்டிருக் கிறோம் ? நானே எதற்காக மனைவியை விட்டு, வீட்டை விட்டு வந்தேன் ? இப்பொழுதுதான் இந்தக் கேள்வி சந்தேகமாய் மாறி நெஞ்சு முள்ளில் இடறி உறுத்த ஆரம்பிக்கிறது. உயர, துரத்தில் கவிழ்ந்து தத்தளிப்பது என் நட்சத் திரந்தானோ ? இரவு பூரா புரிந்தும் புரியாததுமாய் எண்ணங்கள் எரிந்து எரிந்து, கீழ்வானில் சாம்பல் பூக்கிறது. நீங்கள் எதிர்த் திண்ணையில் கல்லாய்ச் சமைந்திருக் கிறீர்கள், இரவு முழுவதும் உங்கள் கண்ணும் இமைக்க வில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/54&oldid=764433" இலிருந்து மீள்விக்கப்பட்டது