பக்கம்:கங்கா.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

கங்கா


பாதி ராத்திரியில், உங்கள் இடத்தில், நீங்கள் இல்லாமல் போய்விடுவீர்களோ என்ற பயத்திலேயே திடுக், திடுக்கென விழித்துக் கொள்கிறேன். நீங்கள் இருக்கிறீர்கள். இருக்கவேண்டும் என்பதற்காக அல்ல. ஏதோ, இருப்பதால் இருக்கிறீர்கள். ஏன் இருக்கிறீர்கள் ? என்று தோன்றுகிறது. தோன்றலாமோ ? எதையோ எதிர்பார்த்துக் கொண்டு, அதற்காகக் காத்திருக்கிறீர்கள். 责 ஒரிரவு. ஒரு சத்திரத்துத் திண்ணையில் தங்கியிருக் கிறோம். நான் சரியாய்ப் படுக்காது சுவரில் சாய்ந்து கொண்டிருக்கிறேன். கால் துக்கத்திலும், அரைத் துக்கத்திலும் என் தலை ஆடுகையில், "வீல்" என்று ஒரு குழந்தையின் வீறல் கேட்டு, திடுக்கிட்டு விழித்துக் கொள்கிறேன். சுற்று முற்றும் பார்க்கிறேன். உங்கள் முகம் என் பக்கம் திரும்புகிறது. ஆசியில் உங்கள் கை உயர்கிறது. உங்கள் முகத்தில் தவழும் புன்னகையின் ஒளி கண் கூசுகிறது. தலை குனிகிறேன். ★

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/56&oldid=1283283" இலிருந்து மீள்விக்கப்பட்டது