பக்கம்:கங்கா.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா

43


அம்மாவுக்குப் பிடித்தமான வாய் வழக்கு ஒன்று. "ஆமாம்-ஆணுக்கு அழகு என்ன வேண்டிக் கிடக்கு ? ஆனை கறுத்தாலும் ஆயிரம் பொன். உங்கப்பா நெருப் பைக் குளிப்பாட்டினாப் போல்தான் இருப்பார். அவர் உடம்பில் அவள் வாய் ஒண்ணுதான் சிவப்பு, புகையிலை யும் வெற்றிலையும் போட்டுக் குதப்பி, எங்களுக்கு என்ன குறைஞ்சு போச்சாம் ?” . அம்மா சிவப்பு, நெருப்புச் சிவப்பு. அப்பா எப்படியிருப்பார் என்று அறியேன். அவர் போனபின்தான் நானே பிறந்தேன். அம்மா தன்னைக் கொண்டாடிக் கொள்வதற்காக, அப்பாவைக் கொண்டாடுகிறாளா ? இல்லை அப்பாவை ஏளனம் செய்கிறாளா? இல்லை தன் வாழ்க்கைக் கொடுமைக்குத் தன்னைத் தேற்றிக் கொள்கிற தினுசு இப்படியா? அல்லது உண்மையாகவே தான் சொன்னபடி எண்ணினாளா-எதுவும் எனக்கு நிச்சயமாய்த் தெரிய வில்லை. 寶 ஆனால் உங்களை இப்பொழுது பார்க்கையில், ஆண்களுக்கு ஏன் அழகு இல்லை ? என்றே தோன்று கிறது. உங்கள் அழகு பிரமிக்கத் தக்கதாயிருக்கிறது. உங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்குப் புல்லரிக். கின்றது. புரியாததோர் வேட்கை ஏற்படுகிறது. இது நல்லதா பொல்லாததா, இருக்கலாமா கூடாதா, இதனு. டைய அர்த்தம்தான் என்ன ? நான் எதில் மாட்டிக் கொண்டேன் ?-என் மனம் குழம்பித் தவிக்கிறது. எப்படியும் எண்ணியது எண்ணியதுதான். ஆயிரம் அடக்கினாலும் தோன்றினது தோன்றியதுதான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/57&oldid=1283284" இலிருந்து மீள்விக்கப்பட்டது