பக்கம்:கங்கா.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 கங்கள் உங்கள் முகத்தின் தேஜஸ்-திடீரென்று உங்களிடம் ஒரு தரிசனம் மலர்கிறது. அதைக் கண்ட எனக்கு மயிர் கூச்செறிகிறது. நீங்கள் மெதுவாய் நகர்கிறீர்கள். நந்தவனத்தில் ஒடும் வாய்க்காலை நோக்கி நடக்கிறீர்கள்.

நீங்கள் அந்தண்டை போனதும் நான் எழுந்துபோய் அந்தப் பூவண்டை நின்றேன். மெய்யாவே இவ்வளவு பெரிய முகம் நான் பார்த்ததில்லை. விரல்களை அகல விரித்த ஒரு பெரிய உள்ளங்கை யளவிற்கு, காற்றின் கிறுக்கில், முக வேற்றுமையுள்ள குழந்தைபோல் அது அஞ்சி, பின்னுக்கு வாங்கிற்று. திடீரெனத் தாங்கமுடியாத தோர் வேட்கை என்னைக் கவ்விற்று. அதை எட்டினேன். எட்ட எட்ட தலையை ஆட்டிக்கொண்டு அது இன்னும் பின்னுக்கு வாங்கிக்கொண்டே போயிற்று. நானே கொஞ்சம் குள்ளம். அதன் பக்கமாய் சாய்ந்து சாய்ந்து, கால் கட்டை விரல்கள் மேல் நின்று, எட்டி அதைப் பறித்து விட்டேன். பறிக்க எட்டியது பிடிக்க எட்ட வில்லை. செடியின் அந்தண்டைப்புறம் அடர்ந்த புதர் நடுவே அது தலையுருண்டு, சரிந்து விழுந்துவிட்டது. ஏமாற்றத்தில் சலிப்பும் வெறுப்பும் கோபமும் அடைந்து திரும்பி வாய்க்காலை நோக்கி நடந்தேன். படித்துறையில் நீங்கள் விழுந்து கிடக்கிறீர்கள். மார்மேல் வலது கையை அழுத்தியபடி, இடது கையின் முழங்கை மேல் உடம்பை ஊன்றிக்கொண்டு மார்வலியில் வளைந்து வளைந்து ஊசலாடுகிறீர்கள், உங்கள் முதல் ரத்தம் வடிந்து சுண்ணாம்பாய் வெளுத்திருக்கிறது. பதறி ஓடி வந்து உங்களை அணைத்து என்மேல் சார்த்திக் கொண்டேன். "ஆத்மா ஆத்மா ஏன் அந்தக் குழந்தையைக் கொன்றாய்? உங்களுக்கு மூச்சடைக்கிறது. குரல் கம்மி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/60&oldid=764440" இலிருந்து மீள்விக்கப்பட்டது