பக்கம்:கங்கா.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா

49


"எங்கே போவது? உடல் கழன்றாலும் உயிர்இருந்து கொண்டேதானிருக்கிறது. குழந்தாய், மெளனம் என்னை அழைக்கிறது. பேச்சுக்கு விடைபெற்றுக் கொள்ளுமுன் உன்னிடம் சொல்லிக் கொள்கிறேன். ஆத்மா, செளக்ய மாயிரு :-செளக்கியமாயிரு !” இதுவே முடிவின் ஆரம்பம். 宽 நீ கீன் எடுத்து வந்த பிட்சையை எதிரே வைக்கிறேன். அதை அப்படியே என்னிடம் திருப்பி விடுகிறீர்கள். விளங் காது விழிக்கிறேன். அன்றிலிருந்து உங்களுக்கு ஆகார மில்லை. தாங்கள் எதையும் தொடுவதில்லை. உங்களுக்கு ஆகாரம் செல்லவுமில்லை. ஒரு நாள் வலுக்கட்டாயமாய் நான் ஊட்டியே பார்க்கிறேன். உள்ளேயே இறங்காமல், கடைவாயில் வழிகிறது, நீங்கள் புன்னகை புரிகிறீர்கள். இனி எதற்கும் பதில், உங்கள் புன்னகைதான். இரவு முழுவதும் உங்களுக்குத் துக்கமில்லை. நாள் முழுவதும் ஆகாரமில்லை. ஆனால் களைப் பின்றி வளைய வருகிறீர்கள். நீங்கள் இப்போது யார் கண்ணிலும் படக்கூட விரும்ப வில்லை. ஜன நடமாட்டமில்லாத பாதைகளையும் ஏகாந்தமான இடங்களையுமேதான் தேடுகிறீர்கள். நீங்களே உங்களுக்கு அன்னியராகி விட்டீர்கள், அந்த அதிசயத்தைப் பார்க்கிறேன். சிநிலையோரத்தில் ஒரு அடர்த்தியான மாமரத்தடியில் தங்கியிருக்கிறோம். 在一4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/63&oldid=1283286" இலிருந்து மீள்விக்கப்பட்டது