பக்கம்:கங்கா.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

கங்கா


பட்டை வீறும் கோடை வெய்யிலில் காற்றின் அனலில் மூச்சு அடைத்துத் தலை சுற்றுகிறது. கானல் நடுநடுங்குகிறது. எனக்குப் பசி வயிற்றைக் கிள்ளுகிறது. அன்று ஏனோ பிட்சை ஒரு கவளம் கூட கிடைக்கவில்லை, முன்பின் அறிகுறியிலாது நீங்கள் திடீரென எழுந்து நடக்கிறீர்கள். என்னைப் பார்க்காமல் நடக்கிறீர்கள். உங்கள் புன்னகையின் புதிரை எப்படி விடுவிக்க முடியும் ? நானும் பின் தொடர்கிறேன். வெய்யிலில் என் முதுகு கன்றிப் போகிறது. ஆனால் நீங்கள் நிலவில் நடப்பதுபோல நிதானமாய் நடக்கிறீர் கள். உங்கள் தோள்களில் நீலச் சுடர்கள் பிறந்து ஆடுகின்றன. கண்ணைக் கசக்கிக் கொள்கிறேன். ஆனால் சற்று நேரத்துக்கெல்லாம், மீண்டும் அதே தோற்றம். சாலையோரத்தில் ஒரு பிச்சைக்கசரி உட்கார்ந்திருக் கிறாள். அழுகிச் சொட்டும் உடல், ஒரு ஒட்டுச் சில்லால் தோளைச் சுரண்டிக் கொள்கிறாள். நீ ரத்தமும் கசிகின்றன. நேரே அவளிடம் போய், நிற்கிறீர்கள். இமைகள் கூழையாகிவிட்ட அவள் கண்கள் கூசி, இடுங்கி, உங்களை ஏற இறங்க நோக்குகின்றன. அடையாளம் கண்டு கொண்டாற்போல் அவைகளில் ஒரு வெளிச்சம். துள்ளி எழுந்து உங்கள் மேல் விழுந்து இறுக அனைத்துக் கொள்கிறாள். வியாதியில் தடித்த உதடுகள் உங்கள் வாயைக் கவ்விக் கொள்கின்றன. உங்கள் உயிரை, ஒளியை அவள் உறிஞ்சிக்குடிக்கும் கோரத்தை ஸ்ஹிக்க முடியாமல் முகத்தைப் பொத்திக் கொள்கிறேன். கொக்கரிக்கும் சிரிப்பு. கண்களிலிருந்து என் கைகளை யெடுத்தபோது அவளுடைய அடையாளம் கூடக் காணோம். நீங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/64&oldid=1283287" இலிருந்து மீள்விக்கப்பட்டது