பக்கம்:கங்கா.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா

55


H šs - -- w _ * - w நீங்கள் உங்களுக்கென்று எதையும் வைத்துக் கொள்ளவில்லை. ஆனால் நீங்கள் சம்சாரிதான்; உங்க ளோடு நான் இருந்தேனே ! உங்களுக்கு ஒரு பணிவிடை நான் செய்ததில்லை. செய்யவும் நீங்கள் விட்டதில்லை. ஆனால் நீங்களோ என்னைக் கூட்டிலிருந்து விழுந்துவிட்ட குஞ்சைப்போல் காப்பாற்றி வந்தீர்கள். இப்பொழுது என்னைத் தனியாய் விட்டுச் சென்று விட்டீர்கள். - * நீங்கள் இருக்கும்வரை தெரியவில்லை. இப்பொழுது உணர்கிறேன். ஆனால் நான் மாத்திரம் மனோவைத் தனியாய்விட்டு வந்துவிடவில்லையா ? மூன்று மாத கர்ப்பிணி, மனோ இப்போது அடிக்கடி மனதில்வந்து நிற்கிறாள், மேனி அழகிட்டிருக்கிறது. மேல் மூச்சு வாங்குகிறது. நிறைந்த விழிகள் என்னைக் குற்றம் சாட்டுகின்றன. நான் செய்தது நியாயமோ ? பிறகு எனக்கே தோன்றுகிறது. இல்லை-நீங்கள் தோற்றுவிக்கிறீர்கள். சில சமயங்களில் நேரும் செய்கைகள், தோன்றும் எண்ணங்கள் என் செயலோ, தற்செயலோ இல்லை; நீங்கள் நெஞ்சை உலுக்குகிறீர்கள். எண்ணங்கள் உதிர் கின்றன. நியாயம் அணியாயம், பாபம் புண்ணியம், நல்லது கெட்டது, இவையெலாம் அப்புறம், அவையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/69&oldid=1283290" இலிருந்து மீள்விக்கப்பட்டது