பக்கம்:கங்கா.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா

57


ஆண்டவனே ! அவனைக் கூப்பிட்டு விட்டால் அவன் வந்துவிட முடியுமா? இல்லை. பக்தி வந்து விடுமா ? பக்தி வேண்டாம். அவன் வேண்டாம். எண்ணத்தின் வைராக்கியம்தான் வேண்டும். அது எந்த மட்டும் இருக்கிறது ? எவ்வளவு நீ தாங்குவாய் ? நீ தேடுவது உன்னை வந்து அடையும்போது, அதை ஏந்த எந்த மட்டுக்கும் பாத்திரமாயிருக்கிறாய் ? உன் க்ஷேத்ரம்-பூமி-எது ? பூமிக்கேற்ற பயிர். பயிருக்கேற்ற பூமி. உன் பூமியில் எது விளையும்? என் செவிகளை விரல்களால் அடைத்துக் கொண்டால் உங்கள் குரல் கேட்கிறது. எண்ணங்கள் என்னுடையவை. குரல் உங்களுடையது. உங்கள் அருகாமையில் உங்கள் வெளிச்சம் என் மேல் விழுந்து கொண்டிருந்த வரை, என் இருள் எனக்குத் தெரியாமலிருந்தது. இப்போது என் தனிமையில் என் இருள், அதிலிருந்து வழியும் என் கறைகள், கறைகளின் நிழல்கள், நிழல்கள் தீட்டும் உருவங்கள், உருவங்கள்உயிர் கொண்டு, இரவு, பகல், வேளை இலாது காட்டும் பேய்கள்-எல்லாம் ஆடி என்னைப் பயமுறுத்து, கின்றன:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/71&oldid=1283292" இலிருந்து மீள்விக்கப்பட்டது