பக்கம்:கங்கா.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா

59


வேளையிலேயே ஒரு அழகு மிளிர்கிறது. காலை வெய்யில் தினத்தைவிட இன்னும் பொன்னாயிருக்கிறது. ஒரு வாசற் குறடில் கால்களைச் சோம்பல் முறித்து நீட்டியபடி கண்களை மூடி, ஒரு பூனை படுத்திருக் கிறது. அதன் மேல் இரு குட்டிகள் விழுந்து புரண்டு விளையாடுகின்றன. சாட்டை போலும் சுழலும் தாயின் வாலை நிறுத்தப் பார்க்கின்றன. ஆனால் வால் எப்படியோ அவைகளின் பிடிக்கு நழுவி ஒரு சமயம் அவைகளை அனைத்து, ஒரு சமயம் அவைகளி னிடையில் சுழல்கிறது. இந்த விளையாட்டு அலுத் ததும் குட்டிகள் தாமே ஒன்றோடொன்று கட்டிப் புரண்டு உருள்கின்றன. என்ன்ை மறந்து வெகுநேரம் பார்த்துக் கொண்டு நிற்கிறேன். இன்று விழித்த வேளை நல்ல வேளையேதான். ஒரு வீட்டில் அழைத்து, கூடத்தில் உட்கார்த்தி இலை போட்டு சாதம் போடுகிறார்கள். ஒரு வயதான அம்மாள் பரிமாறுகிறாள். "வேனுங்கறதைக் கேட்டு வாங்கிச் சாப்பிடு; உன் தாயைப் போல் எண்ணிக்கோடாப்பா-" எனக்குப் பேச முடியவில்லை. உதடுகள் நடுங்கு கின்றன. ஓரங்களில் உறுத்திக் கொண்டு விழிகள் நிறைகின்றன. இலைமேல் தலை கவிழ்கிறது. திடீரெனப் பசிகூட இல்லை. சொல் நெஞ்சுவரை நிரம்பியிருக் கிறது. இலையில் அன்னம் துல்லியமாய், மலராய்க் குவிந் திருக்கிறது. சுற்றி, கறி, -G வறுவல், Lಶ್ವಕ್ಫ, பருப்பு எல்லாம். நெய் ஊற்றிய இடத்தில் சாதத்தின் மேல் பளபளக்கிறது. இம்மாதிரி இலையில் 53ಾ முறையாகப் பார்த்து எத்தனை நாட்கள் ஆகிவிட்டன :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/73&oldid=1283294" இலிருந்து மீள்விக்கப்பட்டது