பக்கம்:கங்கா.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

கங்கா


சுருண்ட ரப்பைகளின் கீழிருந்து, பெரிய கருவிழிகள் என்னைத் துயரத்துடன் நோக்கின. மேலாக்கு காற்றில் படபடவென அடித்துக் கொண்டது. முன்றானைக் கொடுக்கு என் முகத்தில் பட்டது. எனக்கு உடல் வெலவ்ெலத்தது. திண்ணையி லிருந்து குதித்து ஒட்டமாய் ஒடினேன். ஒருமுறை திரும்பிப் பார்த்தேன். அவ்வுருவம் நிலைமாறவில்லை. அதன் பார்வை: மாறவில்லை, திரும்பாமல் ஓடினேன். ஒடிக்கொண்டேயிருந்தேன். என் ஒட்டம் நின்றாகிவிட்டது. ஆனால் நான் இன்னும் உள்ளே போகவில்லை. வாசல் திண்ணையில் உட்கார்ந்திருக்கிறேன். வாசற். கதவு தாளிட்டிருக்கிறது. உள்ளே மனோவின் குரல் கேட்கிறது. குழந்தையைக் கொஞ்சுகிறாள். "அது ஷமத்துடீது அரக்கு ஷமத்து கொள்ளை ஷமத்து வண்டி ஷமத்து இங்கா குடிச்சுட்டு துரங்கப் போறது.டீது அது ” எனக்கு உடல் பரபரக்கிறது. பலத்தைக் கூட்டிக் கொள்கிறேன். நினைவை நிலைநிறுத்திக் கொள்ளப் பார்க்கிறேன். பெளர்ணமி நிலவில் வானத்தில் நட்சத் திரக் கொள்ளை நடக்கிறது. அத்தனை நட்சத்திரங்களி னிடையிலும், என் நட்சத்திரம் எனக்கு அடையாளம் தெரிகிறது. அன்று போல் நிலை குலைந்து தத்தளிக்க வில்லை. ஒரு வெள்ளை மேகத்தை வெற்றியுடன் சவாரி செய்கிறது. அதைப் பார்த்து நான் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. நான் என் நிலை வந்தடைந் தாகிவிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/76&oldid=1283297" இலிருந்து மீள்விக்கப்பட்டது