பக்கம்:கங்கா.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கஸ்தூரி பக்கத்து வீட்டில் குடி சீ-- வந்தாகிவிட்டது. அட்டை தொங்குமுன் 'காலி மோப்பம் எப்படித்தான் எட்டுகிறதோ ? இவ்வீட்டையும் அடுத்த அகத்தையும் இணைத்து இரவும் திறந்தபடியிருந்த கதவை அடைத்தாகிவிட்டது. முதன் முதலில் திறந்து வைத்ததுகூட மறந்து போக, திறந்திேயிருந்த கதவு, ஒரு_நாள் முடிவிடும். மூடியே விட்டது. அதற்குத்தான் கதவே, எனும் உண்மையின் உணர்விலேயே முதுகுத் தண்டு சில்லிடுகிறது. நெஞ்சில் இருள் திரள்கிறது. சே, இனி இங்கிருக்க இயலாது. நானும் வேறு இடம் பார்க்க வேண்டியதுதான். போய் எட்டு நாள் ஆகிவிட்டது. ஆனால், கஸ்தூரி மணம் விடாது இன்னும் வீட்டில் கமழ்கிறது, எதைச் சாக்கிட்டேனும், குழந்தை ஊமையடி பட்டவனாய் தாழ்வாரத்துத் தூண்களைச் சுற்றிச் சுற்றி வருகிறான். "கச்சூவி மாமா எங்கேப்பா ?” வருவாரம் சதாபிஷேகத்துக்குக் காத்திருக்கும் எதிர் வீட்டுப் பட்டு சாஸ்திரிகளிடமிருந்து சாவித்ரிக்கு இனிப் பிறக்கப்போகும் பாப்பாவரை யாருக்கும் கஸ்துரியான தால், கஸ்தூரிக்குக் கெளரவம் குறைந்து விடவில்லை. பெருமை இன்னும் கூடத்தான். பொறாமையைக் கிளறாது, பிரியத்தையே கூட்டும் அதிசயம் வெகு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/78&oldid=764459" இலிருந்து மீள்விக்கப்பட்டது