பக்கம்:கங்கா.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 "எப்படி எனக்கு நேர்ந்ததெல்லாம் இந்தக் கதையில் நேர்ந்திருக்கிறது? எனக்குக்கூட தெரியாதபடி என்னுள் பூட்டி வைத்திருந்த என் அந்தரங்கங்கள் எப்படி இங்கு அம்பலமாயின? எனக்கு எழுத வராததனால் நான் எழுதாத குறை. ஆனால் இவை என் எண்ணங்கள், என் வேதனைகள், என் வேட்கைகள், நான் என் ஆபாசங்கள் என்று அஞ்சி என் நெஞ்சுக்குள் மறைத்ததெல்லாம் இங்கு எழுத்தில் கண்ட பின், உண்மையில் அவை என் ஆத்ம தாபம் என்று இப்போதுதான் தெரிகிறது" என்று கன்னத் தில் கண்ணிர் குளிரத் தலை நிமிர்கையில், எழுத்து,இருவ ருக்குமிடையில் ஊமைச் சிரிப்பு சிரிக்கின்றது. அதற்குத் தெரியும், இருவர் கதையும் ஒரு கதைதான், உலகக் குடும்பத்தின் ஒரே கதை என்று. அதற்குத் தெரியும் தான் சுண்டியது ஒரு தந்திதான், சொல்வதெல்லாம் ஒரு சொல்தான் என்று. உருவேற்றி ஏற்றி, திருவேறி, ஆகாயத்தையும் தன் சிமிழில் அடக்கிக் கொண்டு, இன்னும் இடம் கிடைக்கும் சொல். முதலியார் சொன்னது இப்போது புரிகிறது. எத்தனை விதங்களில் எழுதினாலும், நான் எழுதுவது நான் என் பிறவியுடன் கொண்டு வந்திருக்கும் என கதை தான்; உலகில்-அது உள் உலகமோ வெளியுலகமோ, அதில் நடக்கும் அத்தனையிலும், அத்தனையாவும் எனக்குக் கிட்டுவது என் நோக்குத்தான். ஆகையால் நான் எனக்காகவே வாழ்ந்தாலும் சரி, யாருக்காக அழுதாலும் சரி, அப்படி என் நோக்கில் நான்தான் இயங்குகிறேன், என் நோக்கில் நான் காண்பவர், காணாதவர் எல்லோரும் என் உலகில் என் கதையுடன் பிணைக்கப்பட்டவரே, என் கதையின் பாத்திரங்களால், அவர்கள் ப்ரவேசங்களில் அவர்களை அடையாளம் கண்டு கொள்ளும் வேளைகளில் தான், நெடு நாளைய பிரிவின் பின் சந்திக்கும் பரபரப்பு. பரிமளம், ஜபமாலையின் நெருடலில் ஒவ்வொரு மணியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/8&oldid=764461" இலிருந்து மீள்விக்கப்பட்டது