பக்கம்:கங்கா.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

கங்கா


அப்போ நான் நானாவாயிருந்தேன் ? எனக்கு என் உயிர் வெல்லமாயிருந்தது. கீர்த்திக்கு ஆயுசு கெட்டியா திருந்தது அவ்வளவுதான். வேளை சரியாயிருந்தால் எல்லாம் சரி. எல்லாம் உன்னாலும் என்னாலும் நம்மாலுமில்லை என்று எப்போத்தான் தெரிந்து கொள் வோமோ ?” அதே போல் கார்த்திகையன்று கிட்டுவின் சொக்காய் அகல் சுடரில் பற்றிக் கொண்டபோது இப்போ நினைத் தால்கூட உடல் பறக்கிறது. நிமிஷத்தில் குழந்தை அப்படியே ஜோதியாகவே அன்றோ மாறிவிட்டான் : நானும் பெற்றவன் அவளும் பெற்றவள்தான். ஆனால் ஒலமிட்டபடி சுற்றிச்சுற்றி வருவதுதவிர என்ன தெரி கிறது ? ஆனால் குறுக்குச் சுவரின் வாசல் வழி நீ தாய்ப் பசுப்போல் பாய்ந்து வந்தது இமைச் சிமிழில் மையாகி எடுத்தெடுத்து இட்டுக் கொள்ள இன்னும் அலுக்கவில்லையடா இடுப்பு வேட்டியை அவிழ்த்து கிட்டு மேல் போட்டு மூடி கெட்டியாய்க் கட்டிக்கொண்டு நீ தரையில் உருண்ட காட்சியை, பயமுறைந்து கல்லாய்ப் போன எங்கள் மனத்தில் உளியால் எழுதி விட்டாய், எனக்கு அழுகை வந்துவிட்டது. "கஸ்தூரி, நீ எங்கள் தெய்வண்டா !” என்று ஏதோ குழறிக்கொண்டு விரித்த கையுடன் நான் உன்னிடம் ஓடி வந்தபோது, உனக்கு மெய்யாகவே கோபம் வந்து விட்டது. என் கையை உதறினாய். 'ஏன், உன் உயிர்தான் உசத்தியோ ? குழந்தை உயிர் கொசுரா ? கணக்கில்லையா ? திருப்ப முடியாக் கடன்களாகிவிட்ட செயல்களை அலட்சியமாய்ப் பந்தாடி, மணம் வீசும் பேச்சுக்களால் எங்கள் மனதுக்கினியவனாகிவிட்டாய்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/80&oldid=1283300" இலிருந்து மீள்விக்கப்பட்டது