பக்கம்:கங்கா.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா

67


முகராசி என்பது தனிதாண்டா நான் உத்யோகத் திலமர எவ்வளவு அலைந்திருப்பேன் ! பார்க்கலாம், நாளை வாரும், இன்று நேரமில்லை. இன்னொரு நாள்- இப்படியே அலுக்காத மழுப்பல்களுக்கு நானும் தளராது மிரளாது எத்தனை தரம் படிமிதித்திருப்பேன் : ஆனால் அதே ஆபீஸில் அதே துரையிடம் நான் உன்னைக் கொண்டுபோய் நிறுத்தினதும் அவர் அப்படி பாயிருந்தார் ? இத்தனைக்கும் நான் உனக்காக சிப்பக் கட்டு கட்டவில்லை, உள்ளதைத்தானே சொன்னேன் ! "லார், இன்று காலை இவர் தன் மனைவி சகிதம் என் வீட்டுக்கு வந்தார். (உன் பெயர்கூட அப்போது நான் அறியேன்.) "நேரே ரயிலடியிலிருந்து வருகிறோம். எங்கள் கட்டு சாதத்தைச் சாப்பிட இடமும் இலையும் ஜலமும் வேணும்” என்று கேட்டார். பிறகு பேச்சு வாக்கில் வேலை தேடும் படலமாய்ப் பட்டணம் வந்திருக்கிறார் என்று தெரிந்து, நம் ஆபீஸில் காலியிருக்கிறதே, அதற்குத் தேவையான படிப்பும் யோக்யதையும் தனக்கு உண்டென்று சொல்கிறாரே என்று உங்களிடம் கொண்டு வந்தேன். உங்களிஷ்டம் உங்கள் பொறுப்பு. இன்று காலைமுன் இவர் ஒருவர் உண்டு என்றுகூட எனக்குத் தெரியாது. உன்னை அவன் பண்ணினது உண்மையில் பரீம். சையா ? - அது விஷயத்தில் எனக்குக்கூட மனத்தாங்கல்தான். துரையை ஒரு சமயம் கேட்டும் விட்டேன் : "ஏன் சார், என்னை இவ்வளவு சுலபமாய் விட்டீர்களா ?” ஆனால் அவனும் லேசுப்பட்டவனா? "அதனால்தானே கீர்த்தி இப்போ நீங்கள் இட்டது சட்டமாயிருக்கிறது ?" என மழுப்பிவிட்டான். இப்போது பின்னோக்குகையில், வேலை வேணு மென்று என்னை நீ கேட்கக்கூடவில்லை. ஆனால் அன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/81&oldid=1283301" இலிருந்து மீள்விக்கப்பட்டது