பக்கம்:கங்கா.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

கங்கா


மாலை வந்ததும் உன் மனைவியிடம் நீ சொன்னதை மறக்க முடியாது. "மங்கை, இவர் பெயர் சத்யகீர்த்தி, மன்னி பேர் சாவித்ரி. இவர்கள் பேரும் உறவும் சேர்ந்த இடத்தில் சத்யம் வாசம் பண்ணுவதால்தான் இந்த வாசல் மிதித்த துமே நமக்கு வேளை வந்துவிட்டது." நீ சொன்னதில் முகத்துடைப்பில்லை. வெறும் வாய்ச் சாலக்கில்லை. நன்றி அறிவிப்பு என்றுமில்லை, ஆவேசம் வந்தாற்போல் உன் முகம் குங்குமமாகிவிட்டது. வெறும் பேரின் வாய்ப்பிலேயே சொல்லுக்கு வல்லமை தந்து பேரை மந்திரமாக்கி, அதைச் சத்தியத்தின் உக்கிர மாய் வரவழைத்து அவ்வுக்கிரத்தைத் தாங்கிக்கொண்ட ருத்ரமூர்த்தியாய் அந்நிமிஷம் உன்னை நான் கண்டதும் எனக்கு உடல் முழுவதும் புல்லரித்துப் பிழிந்த மாதிரி யாகிவிட்டது. பேரளவில் சொல்லளவில், சத்யகீர்த்தி யென்றதால், செயலாகி விடுவேனோ? ஆனால் திடீரென சொல்லுக்கும் செயலுக்கும் இடைக்கோடு உன் ருத்திரத் தில் அழிந்ததும் ப்ரளயம் புரண்டெழுந்து ஒரு கணம் என்மேல் மூடி உடல் கிடுகிடுத்துத் தலை "கிர்ர்"ரிட்டது. எனக்கு நினைவு வந்தபோது, நீ என்னைத் தாங்கிக் கொண்டிருந்தாய்; என் விரலால் உன் முகம் தொட்டேன். உன் முகம் தழல் தணிந்து நிழலுக்குத் திரும்பிவிட்டது. என்ன நேர்ந்தது கஸ்தூரி ? நீ எனக்கு என்ன செய்துவிட்டாய் சமயங்களில் புரிவதில்லை; ஆனால் உன் பேச்சில் லாகிரி இருக்கிறது. உனக்கு வேலை கிடைத்தவிதம் பற்றிப் பேச்செழும் போதெல்லாம் நீ பெருமை கொள்வாய். "என்ன மங்கை, நான் சொன்னது நிஜமாச்சு பார்த்தையா? நீ மூக்கால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/82&oldid=1283302" இலிருந்து மீள்விக்கப்பட்டது