பக்கம்:கங்கா.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா

69


அழும்போதெல்லாம் ஆண்டவன் நம்மைக் கைவிட மாட்டான், கைவிடமாட்டான்' என்று எத்தனை தரம் படித்திருப்பேன் நீயே பார்த்துக்கொள். தெரியாவிட் டால் இப்போ தெரிஞ்சுக்கோ, அவனை விட்டால் நமக்குக் கதியில்லை, நம்மை விட்டால் அவனுக்கு வழியில்லை, எதற்கும் வேளை வரனும் வேளையேதான் தெய்வம்: வேளை வந்தால் தெய்வம் வந்தது. தெய்வம் வந்தால் வேளை வந்தது. வேளை வந்து வேலை கொடுப்பதை யார் தடுக்க முடியும் ? காலத்தின் விளிம்பில் வேளை எப்பவும் துளும்பி நிற்கிறது-" அவன் அப்படிச் சொன்னதும் நக்ஷத்ரம் உதிர்ந்தது. இரவு முதிர்ந்த வேளையில், வாசற்குறட்டில் உரு விளங்கா மையிருளில், கனகன’வெனும் அவன் குரலும், மார்தட்டலும் தமக்கெனத் தனி உயிர்கொண்டு என்னை எட்டிப் பற்றுகையில், வியப்புறுவேன். - இந்தச் சின்ன வயதில் ஆண்டவன் மேல் இவ்வளவு பற்றுதலா ? இதென்ன பக்தி மீறிய பரவசமா ? பரவச மீறலில் உரிமையாய் வந்த சலுகையில் ஆண்டவனை நையாண்டியா ? வெற்றி வெறியா ? சொற் சீண்டலா ? சொல்லில் பல்லாங்குழியாடி, புதையல் பொத்து கிறானா? மங்கை, நீ ஏன் வாய் திறப்பதேயில்லை ? "ஊம்!" "ஊ-ஹாம் கூடக்கிடையாதா ? படமாடத் திரையோ சுவரோ தேவைபோல், அவன் விரித்தாடும் தோகைக்கு நீ அரங்கா ? நீங்கள் வந்த புதிதில் நீ ஊமையோ என்று கூட நாங்கள் ஐயுற்றதுண்டு. அதற்காகக் கஸ்தூசிக்கு இரங்கினதுமுண்டு. ஏண்டா கஸ்தூரி, என் மனம் உனக்குக் கண்ணா டியா ? எப்படி_? அப்படியேதான் இருக்கட்டுமே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/83&oldid=1283303" இலிருந்து மீள்விக்கப்பட்டது