பக்கம்:கங்கா.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岛厝。&·莎*。 ፵፰ கஸ்தூரி இல்லாமல் இனி எப்படி இருக்கப் போகி றோம் ? முதலில் என் பையனுக்கு யார் பதில் சொல்வது ? பக்கத்து நாற்காலியிலிருந்து ஒன்றிருவர் வந்தனர். "என்னப்பா கஸ்தூரி, "அவுட்”டா ? போ, அங்கெல் லாம் சப்பாத்தி கிழங்குதான். காய்ந்த ரொட்டிபோல் ஒட்டி உலர்ந்திருக்கேயே அங்கே போய் ஆட்டாவைத் தின்னு தின்னு இடுப்பு செக்குமாதிரி ஆகிவிடப் போகிறது.” "அங்கெல்லாம் வெற்றிலைக்குப் பஞ்சம் தெரியு மோன்னோ ? தழை குதப்பறதெல்லாம் இனிமேல் வேகாது அப்பேன் வெற்றிலையைக் கடிதாசில் வரைந்து, கண்ணால் பார்த்துக் கொண்டே வெறும் வாயை மெல்ல வேண்டியதுதான்.” “என்னப்பா கீர்த்தி, இடிஞ்சு போய் உட்கார்ந் துட்டியே மாற்றல் உனக்கா, அவனுக்கா ? விழிகள் உறுத்தின. எனக்குமிருந்தால் நல்லதே, அவனோடு சேர்ந்து. கஸ்தூரி என் முதுகில் பளார் என்று அறைந்தான். “சமாளி ப்ரதர் சமாளி. வேளை வந்துவிட்டது. சேர ஒருவேளை. பிரிய ஒருவேளை. பிளேட்டைத் திருப்பிப்போடு. ஆட்டம் முடிந்தது. சீட்டைக் கலை, புதிதாய் வெட்டு, ஹஹ்ஹாஹஹாஹ்ஹா- !” "ஆட்டம் முடிந்தது' என்றதும் முந்தின இரவு ஞாபகம் வந்தது. - நீ நீங்கள் சொக்கட்டானாடினோம். சாவித்ரியும் கஸ்துரியும் ஒரு கட்சி. நானும் மங்கையும் இன்னொரு கட்சி. ‘இதென்ன விளையாட்டு, போர் இதுவும் ஒரு விளையாட்டா என்று முனகல், ஆக்ஷேபணைகளுடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/89&oldid=764471" இலிருந்து மீள்விக்கப்பட்டது