பக்கம்:கங்கா.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 தன் முறை வந்ததும், தான் தனி மணி என அதன் மேல்" உருவேறிய நாமத்தில் தன் பிரக்ஞையை அடையும் புது விழிப்பு. 寅 சொல் என்று ஒரு வார்த்தை இப்போது இங்கு. அடிபட்டுக் கொண்டிருக்கிறது. நான் சொல் என் கையில், வெறும் அவ்வார்த்தையைக் குறிக்கவில்லை. ஒவ்வொரு வார்த்தையின் மீட்டலிலிருந்து எழும் மனிதத்தன்மையின் கீதம், பிந்துவின் சீறல், வீசியெறிந்த பிடிநெல்லினின்று. வயல் நிறைந்த விளைச்சலைச் சொல்கிறேன். வாயில் வந்ததெல்லாம் பேச்சு, எழுதியதெல்லாம் எழுத்து என்று சமயத்தைப் பணம் பண்ணும் மேடை எழுத் தாளர்களுக்கு என் பாஷை பிடிக்காது. அதனாலேயே அவர்கள் புரிந்து கொள்ள முயற்சி செய்யவும் மாட் டார்கள். நான் சொல்வது அவர்களுக்குத் தேவையு மில்லை; அவர்களை விட என் அனுபவத்தில், வாசகர் களே என்னை நன்கு புரிந்து கொண்டிருக்கிறார்கள். நான் என்னைப் பாடிக் கொள்கையில் உண்மையில் மரபைத்தான் பாடிக் கொண்டிருக்கிறேன். என் பிறவி யுடன் கொண்டு வந்த என் கதையைச் சொல்கையில், உயிரின் சாசனத்தை என் சகோதரர்களின் நெஞ்சில் நித்தியமாய் செதுக்கிக் கொண்டிருக்கிறேன். இதுவே: என் விதி, என் விதியே என் பெருமிதம். இதுதான் நான் தேடும் என் செர்ல். என் சொல்தான் என் உள. நான் தேடும் பொருளோ நயமோ தரும் சொல் கிட்ட, ஒரொரு பக்கத்தை, பதினெட்டு, இருபத்திதேழு. தடவைகள் எழுத நான் அலுத்ததில்லை. தேடியலைந்த போதெல்லாம் கண்ணாமூச்சியாடி விட்டு, சொல் என்னை நள்ளிரவில் தானே தட்டி யெழுப்பி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/9&oldid=764472" இலிருந்து மீள்விக்கப்பட்டது