பக்கம்:கங்கா.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ரா

77


பளபளப்பு. கால்களை மண்டியிட்டு ஒரு கையைத் தரையில் ஊன்றி, இன்னொரு கையில் பாய்ச்சிகையுடன் என் வார்த்தைக் குக் காத்திருக்கையில், பாய்ச்சலில் பதுங்கிய விலங்கு போலிருந்தான். எதை வேட்டை யாடுகிறான் ? அவனின்று காந்தம் விறுவிறுத்தது. அது என்னைக் கவ்வி விடாதபடி என் ப்ரக்ஞையை என்னில் ஊன்றிக் கொண்டேன். "நீ இதுவரை ஒரு தாயந்தான் போட்டிருக்கிறாய். ஆனால் இரு தாயமாய்க் கூட்டுகிறாய்” என்றேன். "இல்லை இருதாயம் விழுந்தது." "இல்லை ஒரு தாயம்தான். வேனுமானால் மங்கை யைக் கேள்.” "ஓஹோ உன் கட்சி ஆளையே சாட்சி வைக்கி றாயா?" அவன் அப்படிக் கேட்டது எனக்குக் கொஞ்சம் ரோசமாய்த்தானிருந்தது. "தம்பி, இந்த சமயத்துக்கு உன் பெண்டாட்டியைத் தான் சாட்சிக்குக் கூப்பிடுகிறேன் கட்சியை, அல்ல." "ஹாம் ! அவளுக்கென்ன தெரியும் ? விழுந்த தொகையைத் திருப்பிச் சொல்லத் தெரியுமா ?” "என்னால் கூடத்தான் முடியாது. அதனால் நான் பைத்தியக்காரனா ? இல்லை நீ இரு தாயம் போட்ட வனாகி விடுவாயா ?” "அப்போ என்னைப் பொய்யன் என்கிறாயா?" அவன் பற்கள் ஒளி வீசின. "அது எனக்குத் தெரியாது; விழுந்தது ஒரு தாயம் தான் என்கிறேன். கூரை மேலிருந்து கூவுகிறேன்." எல்லாருக்கும் ஒரே சமயத்தில் சட்டென வாயடைத்துவிட்டது. இம்சையான மெளனம் அங்கு தேங்கிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/91&oldid=1283307" இலிருந்து மீள்விக்கப்பட்டது